அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பா.ஜ.,ஏன் தனித்து போட்டியிடவில்லை: சீமான் கேள்வி

Added : ஜன 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை:'இந்தியாவை ஆளும் பெரிய கட்சியான பா.ஜ., ஏன் தமிழகத்தில் தனித்து போட்டியிடவில்லை. தனித்து போட்டியிட்டாலும், நட்டா வந்தாலும், நோட்டாவிற்கு கீழ்தான் பா.ஜ.,தோற்கும்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.சட்டசபை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மதுரை
 தமிழகத்தில் பா.ஜ.,ஏன் தனித்து போட்டியிடவில்லை: சீமான் கேள்வி

மதுரை:'இந்தியாவை ஆளும் பெரிய கட்சியான பா.ஜ., ஏன் தமிழகத்தில் தனித்து போட்டியிடவில்லை. தனித்து போட்டியிட்டாலும், நட்டா வந்தாலும், நோட்டாவிற்கு கீழ்தான் பா.ஜ.,தோற்கும்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சட்டசபை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேலும் பேசியதாவது:உரிய நேரத்தில் இழப்பீட்டு தொகையை வழங்காததால் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது, கொலை செய்வது தொடர்கிறது. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க முடியாது. இதுவரை 845 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான நாட்டை நட்பு நாடு எனக்கூறி ராணுவ பயிற்சி, ஆயுதங்கள் வழங்குவது கொடுமை. இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறாக உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் வந்தால் போர் பதட்டத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த பா.ஜ., கூடுதல் கவனம் செலுத்துகிறது. இந்தியாவிற்கென கட்சி தேவையில்லை. ஒவ்வொரு மாநிலத்தையும் அந்தந்த மாநில கட்சிகள் ஆட்சி செய்ய வேண்டும்.

கூட்டாட்சி தத்துவப்படி அனைவரும் சேர்ந்து இந்தியாவை ஆள வேண்டும். தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். சசிகலா உடல்நலம் குணமாகி விடுதலையாகி வர வேண்டும் என்பதே எனது விருப்பம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரிதி.மு.கவை அழிப்பது எங்கள் நோக்கம் ,இந்தியா
30-ஜன-202120:23:36 IST Report Abuse
Nisha Rathi தம்பி சீமான் பா.ஜ.க வளர்ந்தபிறகு தனித்து போட்டியிடுவார்கள் நீ ஒன்னும் கவலைப்படாதே உன்னைவச்சி தான் பா.ஜ.க வளரனும் தம்பி
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
28-ஜன-202114:02:01 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ அப்படித்தானேயா காங்கிரஸ் 70 வருசமா(சுதந்திரம் வாங்கி 2 தடவ மட்டும் மெஜாரிட்டி ஆட்சி) மாநில கட்சிகளோட கூட்டு வச்சி முக்காவாசி மைனாரிட்டி ஆட்சி நடத்திக்கிட்டு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளை கொள்ளையடிக்கவிட்டு கூட்டுக்கொள்ளை அடிச்சிகிட்டிருந்தது. அதே முறை திரும்பவும் வரணும், மாநிலக்கட்சிகளுக்கு மானாவாரியாக கொள்ளையடிக்கும் உரிமை வேண்டும் என்ற உங்கள் கொள்கையை வெளிப்படையாக கூறுகிறீர்கள், சீனா பக்கிஸ்தான் காரனுவ கூட சேந்து முடிந்தா தனித்தனி நாடுகளா கழட்டிகிட்டு காவிரி போன்ற அண்டைமானில பிச்சனைகளை எரியவிட்டு அதில் நீங்கள் குளிர்காய்ந்துகொள்ளலாம், மக்கள் கதி??????
Rate this:
Cancel
24-ஜன-202113:04:28 IST Report Abuse
அமலச்செல்வன் சைமனின் தனி தமிழ்நாடு எண்ணம் என்றும் நிறை வேறாது. மத்திய அரசு என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X