பொது செய்தி

தமிழ்நாடு

குவாரி வரிகளை ஊராட்சிக்கு செலுத்த உத்தரவிட வேண்டும்.. கூட்டமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
தேனி : 'வருவாயை பெருக்க குவாரி வரிகளை ஊராட்சிகளுக்கு செலுத்த உத்தரவிட வேண்டும்,'என,ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வீரபாண்டியில் அனைத்து ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் முத்துவேல் (கோட்டூர்), தலைவர் பால்ராஜ் (ராயப்பன்பட்டி) தலைமை வகித்தனர். செயலாளர்
 குவாரி வரிகளை ஊராட்சிக்கு செலுத்த உத்தரவிட வேண்டும்..  கூட்டமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

தேனி : 'வருவாயை பெருக்க குவாரி வரிகளை ஊராட்சிகளுக்கு செலுத்த உத்தரவிட வேண்டும்,'என,ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வீரபாண்டியில் அனைத்து ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் முத்துவேல் (கோட்டூர்), தலைவர் பால்ராஜ் (ராயப்பன்பட்டி) தலைமை வகித்தனர். செயலாளர் சின்னப்பாண்டி (எண்டப்புளி), பொருளாளர் ராஜேந்திரன் (கொட்டக்குடி) ,துணைச் செயலாளர் லதா (அகமலை) முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பில் 8 ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து ஊராட்சித்தலைவர்கள் பங்கேற்றனர். தீர்மானங்கள்பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து வளர்த்தித் திட்டப் பணிகளையும் ,ஊராட்சி தீர்மானத்தின் படி தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பணிகளுக்கும் கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கிட வேண்டும்.

இலவச திட்ட பயனாளிகளை ஊராட்சி பரிந்துரையின் படி தேர்வு செய்ய முழு அதிகாரம் வழங்கிட வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்டோருக்கு வழங்கப்படுவது போல் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும், நிதி வருவாயை பெருக்க குவாரிகளின் வரியினங்களை ஊராட்சிகளுக்கு செலுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும், தாழ்த்தப்பட்ட, பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில் ஏற்படும் பிரச்னைகளை தனிக்குழு அமைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X