நாடு கடத்தப்படுவதை தடுக்க மல்லையா மாற்று முயற்சி

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
லண்டன் : இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க தொழிலதிபர் விஜய் மல்லையா மாற்று வழியில் முயற்சித்து வருவதாக லண்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடுகடத்துவதற்காக மத்திய அரசு வழக்கு

லண்டன் : இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க தொழிலதிபர் விஜய் மல்லையா மாற்று வழியில் முயற்சித்து வருவதாக லண்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு
கடத்துவதற்காக மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.இதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த வழக்கை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் பிரீத்தி படேல் கையெழுத்திட்டதும் அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்'சில சட்ட நடைமுறைகள் இருப்பதால் எப்போது நாடு கடத்தப்படுவார் என்பதை உறுதியாக கூற முடியாது' என இந்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் பிரிட்டன் கூறியுள்ளது.
இதற்கிடையே பிரிட்டனில் உள்ள சொத்தை மல்லையா விற்றுள்ளார். அந்த பரிவர்த்தனையில் கிடைத்துள்ள பணத்தை பிரிட்டன் நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது. அதை விடுவிக்கக் கோரி மல்லையா சார்பில் லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news



இது தொடர்பான விசாரணையின்போது மல்லையாவை நாடு கடத்துவது குறித்த நடவடிக்கைகளின் தற்போதைய நிலை பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு 'மல்லையா பிரிட்டனிலேயே தொடர்ந்து தங்கியிருப்பதற்காக மாற்று வழியில் முயற்சி நடந்து வருகிறது' என அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 'தற்போதைக்கு மல்லையாவுக்கு உள்ள கடைசி வாய்ப்பு அடைக்கலம் கோருவதுதான். 'ஆனால் நாடு கடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்குக்கு முன்பாகவே அவர் மனு அளித்திருந்தால் தான் அது ஏற்கப்படும்' என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜன-202118:58:58 IST Report Abuse
Endrum Indian என்ன மல்லையா இந்திய நாட்டு ஜல்லடை ஓட்டை சட்டம் இருக்கும் வரை உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று நன்றாகத்தெரிந்தது தானே என்ன பெட்டி குடு ஜாமீன் கிடைக்கும் ஆயுள் காலம் வரை. உ.ம் ப.சி., பப்பு , அன்டோனியோ, லல்லு
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
24-ஜன-202112:42:09 IST Report Abuse
Nallavan Nallavan அடப்பாவமே ........... காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் நிம்மதியாக இந்தியாவிலேயே இருந்திருக்கலாம் ....... ஒரு தொந்தரவு கிடையாது ............ ஏன் கடன் பாக்கி வைத்திருக்கிறாய் என்று வங்கி கூட கேட்காது ...............
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜன-202110:53:21 IST Report Abuse
Bhaskaran பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பதனை இந்தக்கால தலைமுறைக்கு தெரிந்துகொள்வதற்கு இவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X