தடுப்பூசி போடாவிட்டால் மீண்டும் முன்னுரிமை இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தடுப்பூசி போடாவிட்டால் மீண்டும் முன்னுரிமை இல்லை'

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (13)
Share
சென்னை : 'சுகாதார பணியாளர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் தடுப்பூசி போட்டு கொள்ளாவிட்டால் மீண்டும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது' என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.இந்தியாவில் 'கோவாக்சின் கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 16ம் தேதி முதல் நாடு முழுதும் சுகாதார பணியாளர்களுக்கு

சென்னை : 'சுகாதார பணியாளர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் தடுப்பூசி போட்டு கொள்ளாவிட்டால் மீண்டும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது' என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.



latest tamil news



இந்தியாவில் 'கோவாக்சின் கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 16ம் தேதி முதல் நாடு முழுதும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் 4.5 லட்சம் பணியாளர்கள் தடுப்பூசி போட'கோ-வின்' என்ற செயலியில் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் பலர் தயக்கம் காட்டியதால் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செயலர்ராதாகிருஷ்ணன் மற்றும் பிரபல டாக்டர்கள் என 60 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுஉள்ளனர். ஆனாலும் சுகாதார பணியாளர்களிடம் தயக்கம் தொடர்கிறது.


latest tamil news


இந்நிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:டாக்டர்கள் நர்ஸ்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் விபரங்கள் 'கோவின்' செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் எந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த மையத்தில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி குறிப்பிட்டதேதியில் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்கப்படாது. அவர்களின் பெயர்கள் பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்று விடும். அவர்கள் கடைசியில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்த பின் அடுத்தகட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும். அதன்படி 1.10 லட்சம் காவல் துறையினர் 70 ஆயிரம் உள்ளாட்சி ஊழியர்கள் உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X