பொது செய்தி

இந்தியா

நகராட்சிக்கு சொந்தமான கடைகளை காலி செய்ய நோட்டீஸ்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
தங்கவயல்: தங்கவயல் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை, இருபது நாட்களுக்குள் காலி செய்யுமாறு, வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நேற்று துவங்கியது.தங்கவயல் நகராட்சிக்கு சொந்தமாக, 1,774 கடைகள் உள்ளன. இவைகளை, 'இ - டெண்டர்''ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.இதனால், 40 ஆண்டுகளுக்கு மேலாக, நகராட்சிகடைகளில், வியாபாரம் செய்து வருவோர், அந்த கடைகளை, 12 ஆண்டு குத்தகைக்கு,

தங்கவயல்: தங்கவயல் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை, இருபது நாட்களுக்குள் காலி செய்யுமாறு, வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நேற்று துவங்கியது.தங்கவயல் நகராட்சிக்கு சொந்தமாக, 1,774 கடைகள் உள்ளன. இவைகளை, 'இ - டெண்டர்''ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.இதனால், 40 ஆண்டுகளுக்கு மேலாக, நகராட்சிகடைகளில், வியாபாரம் செய்து வருவோர், அந்த கடைகளை, 12 ஆண்டு குத்தகைக்கு, தங்களுக்கே,வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த, 18 முதல், நான்கு நாட்கள் தொடர்ந்து, கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர், மாவட்ட கலெக்டர், மாநில நகராட்சி இயக்குனர், அப்போதைய நகராட்சித்துறை அமைச்சர் நாராயண கவுடா, ஆகியோரை நேரில் சந்தித்து, தங்களின் கோரிக்கைகளைநிறைவேற்ற வலியுறுத்தினர்.இந்நிலையில், தங்கள் போராட்டத்தை, கடந்த, 21 ல்வாபஸ் பெற்றனர். தொடர்ந்து, சட்ட ரீதியான போராட்டத்தை சந்திக்க, ஆயத்தமாகினர்.இதற்கிடையில், கடைகளை காலி செய்யுமாறு, அனைத்து கடைகளுக்கும் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.ராபர்ட்சன் பேட்டை முதல் குறுக்கு சாலையில் உள்ள, ஜூவல்லரி கடைகளுக்கு, நகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கினர்.இதையறிந்த, எம்.ஜி. மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளின் வார்டு நகராட்சி உறுப்பினரான, ரமேஷ் ஜெயின், நகராட்சி ஊழியர்களிடம், 'இன்று (நேற்று) நான்காவது சனிக்கிழமை. நகராட்சி அலுவலக விடுமுறை தினம். நோட்டீஸ் வழங்க சொன்னது யார்' என கேள்வி கேட்டு, நோட்டீஸ் வழங்க விடாமல் தடுத்தார்.இதனால், சில கடைகளுக்கு மட்டுமே, நோட்டீஸ் வழங்கிய பின், நிறுத்தி விட்டனர். திங்கட்கிழமை காலை முதல், மீண்டும் நோட்டீஸ் வழங்கப்படும், என்றனர்.நோட்டீஸில், 'நகராட்சிக்கு சொந்தமான அனைத்து கடைகளையும், நோட்டீஸ் பெற்ற, 20 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X