தாவணகரே: பெங்களூரு மாநகராட்சி, பொம்மனஹள்ளி மண்டல செயல் பொறியாளர் அஞ்சனப்பாவின் வீட்டில், கணக்கில் காட்டப்படாத, 3.98 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பெங்களூரு மாநகராட்சி, பொம்மனஹள்ளி மண்டல செயல் பொறியாளர் அஞ்சனப்பா வீடு, அலுவலகங்களில் நேற்று முன்தினம், ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படையினர், அதிரடி சோதனை நடத்தினர். அவரின் சொந்த ஊரான தாவணகரே, லோகிகரே கிராமத்தில், நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் காட்டப்படாத, 35 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.2 கிலோ தங்க நகைகள், 80 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், கணக்கில் காட்டப்படாத, 15.20 ஏக்கர் பாக்கு தோட்டம், ஒரு கார், ஒரு பைக், விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு, 3.98 கோடி ரூபாய் மதிப்பு என ஏ.சி.பி., அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.நீண்ட நாட்களுக்கு பின், பெங்களூரு மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம், அதிகபட்ச ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE