பெங்களூரு: விஜயநகர பேரரசர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், இம்முறை டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில், கர்நாடகா சார்பில் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. ஒத்திகையில் ஈடுபடுகிறது.டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில், கர்நாடகா சார்பில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெருமையை கூறும் வகையில், அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது.சங்கம ராஜ்ய வம்சத்தை சேர்ந்த ஹரிஹரா 1, புக்கராயா 1 ஆகிய இருவரும் விஜயநகர சாம்ராஜயத்தை நிறுவியவர்கள். இவர்களின் ஆட்சி காலத்தில், மக்கள் செழிப்புடன் வாழ்ந்தனர். பொற்காலமாக அனைவராலும் பேசப்பட்டது.இந்திய வரலாற்றில், விஜயநகர பேரரசர்களின் சாதனை குறிப்பிடத்தக்கது. விஜயநகர் காலத்திலும், ஹம்பி புராதன நகரம் உருவாக்கப்பட்டது.1500ல், சீனாவின் பீஜிங் நகருக்கு பின், உலகின் மிகப்பெரிய மற்றும் இந்தியாவின் செழுமை மிக்க அரசர்களாக விஜயநகர பேரரசர்கள் அழைக்கப்பட்டனர்.இத்தகைய பெருமை வாய்ந்த விஜயநகர பேரரசை விளக்கும் வகையில், இம்முறை குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்தியில் இடம் பெறுகிறது.ஹம்பியின் உக்ர நரசிம்மர்; பகவான் ஹனுமன் பிறந்த இடமாக கருதப்படும் அஞ்சனாத்ரி மலை; விஜயநகர பேரரசர்களில் மாமன்னராக திகழ்ந்த கிருஷ்ணதேவராயரின் பட்டாபிேஷகம்; அஜார ராமர் கோவில் போன்றவை, தத்ரூபமாக அலங்கார ஊர்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.டில்லியில் ராஜபாதையில் நடந்து வரும் குடியரசு தின விழா ஒத்திகையில், அலங்கார ஊர்தி ஈடுபட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE