பெங்களூரு: மசாஜ் பார்லர் பெயரில், இளைஞர்களை ஈர்த்து, இளம்பெண்ணுடன், ஆபாச போட்டோ எடுத்து, அதை காண்பித்து மிரட்டி, பணம் பறித்த, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரின், கனகபுரா சாலையில் வசிக்கும், 38 வயது நபர் ஒருவர், உடலை மசாஜ் செய்து கொள்ள திட்டமிட்டு, ஜன., 11ல் இணைய தளத்தில், மசாஜ் பார்லரை தேடினார். மசாஜ் பார்லர் ஒன்றின் விளம்பரத்தை கவனித்து, அதில் குறிப்பிடப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார்.அதில் பேசிய நபர்கள், ஜெயநகரின் பம்ப் ஹவுஸ் அருகில், வரும்படி கூறினர். அந்நபர் அங்கு சென்ற போது, காரில் இருந்த சிலர், இளம்பெண்ணை காண்பித்து, அந்நபரிடம், 15 ஆயிரம் ரூபாய் பெற்றனர்.அதன்பின், வீட்டிலேயே மசாஜ் செய்து, மீண்டும் இதே இடத்தில் விட்டு விடுவதாக கூறி, காரில் குமாரசாமி லே - அவுட் அருகிலுள்ள, வீட்டுக்கு அழைத்து வந்தனர்.அங்கிருந்த இளம் பெண், மசாஜ் செய்வது போன்று நடித்து, அந்நபருடன் ஆபாசமாக, மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டார். அதை நபரிடம் காண்பித்து, நான்கு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், போட்டோவை, நண்பர்கள், உறவினருக்கு அனுப்புவதாக மிரட்டினர்.காரில் ஏ.டி.எம்., மையத்துக்கு, அழைத்து சென்று, 50 ஆயிரம் ரூபாய் எடுக்கும்படி செய்தனர். அவரது கழுத்திலிருந்த தங்கச்செயின், மோதிரத்தை பறித்துக்கொண்டனர்.குமாரசாமி லே - அவுட்டின், லாட்ஜூக்கு அழைத்து சென்று, அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டினர். அவரது நண்பர் நவீனுக்கு, போன் செய்ய வைத்து, ஒரு லட்சம் ரூபாய் கொண்டு வர வைத்தனர்.அதன்பின், மீதி தொகையை, விரைவில் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், ஆபாச போட்டோவை, சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக எச்சரித்து அனுப்பினர்.பீதியடைந்த நபர், நண்பர்களின் ஆலோசனைப்படி, குமாரசாமி லே - அவுட்டில், புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், மைக்கேல் ராஜ், 27, ரகு, 33, சிவகுமார், 23, திம்மப்பா, 38, ஹனுமேஷ், 28, மனுகுமார், 28, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பெண்ணை தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE