பா.ஜ.,வினால் வேலைஇல்லா திண்டாட்டம்:காங்., தலைவர் சிவகுமார்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
சதாசிவ நகர்: ''பா.ஜ., ஆட்சியினால், நாடு முழுவதும் வேலை வாய்ப்பு திண்டாட்டம் உருவாகியுள்ளது. பெண்களை மட்டும் குறி வைத்து, இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ளது,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றம்சாட்டினார்.பெங்களூரு சதாசிவ நகரில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், நேற்று கூறியதாவது:முதல்வர் எடியூரப்பாவின் பதவிக்கும், வயதுக்கும், கவுரவம் அளிக்கிறோம். அவரை

சதாசிவ நகர்: ''பா.ஜ., ஆட்சியினால், நாடு முழுவதும் வேலை வாய்ப்பு திண்டாட்டம் உருவாகியுள்ளது. பெண்களை மட்டும் குறி வைத்து, இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ளது,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றம்சாட்டினார்.பெங்களூரு சதாசிவ நகரில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், நேற்று கூறியதாவது:முதல்வர் எடியூரப்பாவின் பதவிக்கும், வயதுக்கும், கவுரவம் அளிக்கிறோம். அவரை மதிப்போம்.காங்கிரசில் உள்ள நாங்கள் அனைவரும், இறந்த குதிரைகள் என்றும், எங்கள் கட்சி முறிந்து விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.அமைச்சர் அசோக் கூறியபடி, நாங்கள் வேலையில்லாதவர்கள். உண்மை தான். பா.ஜ., ஆட்சியில் நாடு முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமை அதிகரித்துள்ளது. நாங்களும் வேலையின்றி திண்டாடுகிறோம்.மத்திய, மாநில, பா.ஜ., அரசுகள், வேலையில்லா பிரச்னையை நாட்டுக்கு அளித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக, வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து, நாங்கள் போராடியதால், போக்குவரத்து அதிகமானது, என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கர்நாடகா மேலவையில், தலைவரையே வர விடாமல் கதவை அடைக்கும் சம்பவம் நடக்கும் என யாராவது எதிர்பார்த்தோமா.அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இது உதாரணம்.தன்னை இழுத்ததால், சுய பாதுகாப்புக்காக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சவும்யா ரெட்டி, போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனால், அவரது ஆடைகளை இழுத்து, தொல்லை கொடுத்துள்ளனர்.நாங்கள் எவ்வளவு முயன்றாலும், போலீசார் சதி செய்து, எங்கள் தலைவர்கள், தொண்டர்களுக்கு தொல்லை கொடுத்தனர்.சவும்யா ரெட்டி மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கு மறைமுக காரணமான, பா.ஜ., தலைவர்கள் மீது ஏன் சுயமாக வழக்கு பதிவு செய்யவில்லை. சவும்யா ரெட்டி மீது பதிவான வழக்கை சந்திக்க தயாராக உள்ளோம்.ஆர்.ஆர்.நகர் இடைத்தேர்தலில், நான் மற்றும் சித்தராமையா போராடினோம். எங்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யாமல், எங்கள் வேட்பாளர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தனர்.பெண்களை குறிவைத்து, அவர்களை மிரட்டுவதற்காக வழக்கு போடுகின்றனர். இதன் பின்னணியில், அரசு உள்ளது என்பது தெளிவாகிறது. அரசு கூறாமல், வழக்கு பதிவு செய்ய வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X