வெடிவிபத்திற்கு முதல்வரும் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் காரணம்: சித்தராமையா

Added : ஜன 24, 2021
Share
Advertisement
பெங்களூரு: ''ஷிவமொகாவில் நடந்த வெடி விபத்துக்கு முதல்வர் எடியூரப்பாவும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஈஸ்வரப்பாவும் தான் முழு காரணம். எனவே, உயர் நீதிமன்ற தற்போதைய நீதிபதி கண்காணிப்பில், நீதி விசாரணை நடத்த வேண்டும்,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.ஷிவமொகா ஹுனசூடுவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் கற்கள் வெடிக்க

பெங்களூரு: ''ஷிவமொகாவில் நடந்த வெடி விபத்துக்கு முதல்வர் எடியூரப்பாவும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஈஸ்வரப்பாவும் தான் முழு காரணம். எனவே, உயர் நீதிமன்ற தற்போதைய நீதிபதி கண்காணிப்பில், நீதி விசாரணை நடத்த வேண்டும்,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.ஷிவமொகா ஹுனசூடுவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் கற்கள் வெடிக்க பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்து பலர் மரணமடைந்தனர்.இச்சம்பவம், உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.இது குறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:ஷிவமொகாவில் நடந்திருப்பது மிக பெரிய சம்பவம். ஆந்திராவிலிருந்து வெடிபொருள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு, உரிமம் பெறவில்லை.வெடி பொருளை பாதுகாப்பான இடத்திலும் வைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு, அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும்.பா.ஜ., - எம்.எல்.சி., ஆயனுார் மஞ்சுநாத் தகவலின்படி, ஷிவமொகாவின் பல பகுதிகளில் உரிமம் பெறாத, கல் குவாரிகள் இயங்குகிறது.முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே, நுாற்றுக்கும் அதிகமான கல் குவாரிகள் இயங்குவது தெரியவந்துள்ளது.வெடி விபத்து சம்பவத்துக்கு முதல்வர் எடியூரப்பாவும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஈஸ்வரப்பாவும் முழு பொறுப்பாகும்.இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு, நிவாரண நிதி வழங்க வேண்டும்.முறைகேடான கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும்.தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில், விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X