சிக்கமகளூரு: கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம், துறைகள் ஒதுக்கீடு, துறைகள் மாற்றியதால், அமைச்சர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, இன்னும் மறையவில்லை. சில அதிருப்தி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சொகுசு விடுதியில், ரகசிய கூட்டம் நடத்தியது, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியது.முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில், காலியாக இருந்த ஏழு இடங்கள், சமீபத்தில் நிரப்பப்பட்டது.ஏற்கனவே பதவியிலிருக்கும், பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டது. இதனால் அமைச்சர்கள், பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்கள், கோபத்தில் உள்ளனர். அவர்களை சமாதானம் செய்ய முடியாமல், முதல்வர் எடியூரப்பா திண்டாடுகிறார்.இந்நிலையில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில், சில அதிருப்தி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சிக்கமகளூரு புறநகரில் உள்ள, 'சராய்' சொகுசு விடுதியில், நேற்று முன் தினம் இரவில், ரகசிய கூட்டம் நடத்தினர்.இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கோபாலய்யா, யோகேஸ்வர், எம்.எல்.ஏ.,குமாரசாமி உட்பட, பலர் இருந்தனர். இந்த ரகசிய கூட்டம், முதல்வர் எடியூரப்பாவுக்கு, மற்றொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE