பொது செய்தி

இந்தியா

பெங்களூரு போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய தீர்ப்பாயம்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
பெங்களூரு: ''பெங்களூரு நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க, தனி போக்குவரத்து தீர்ப்பாயம் உருவாக்கப்படும்,'' என, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நம்பிக்கை தெரிவித்தார்.போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து துறை, பெங்களூரு மாநகராட்சி இணைந்து, டவுன் ஹாலில், 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி நேற்று நடத்தினர்.இந்நிகழ்ச்சியை, துணை முதல்வர் அஸ்வத்

பெங்களூரு: ''பெங்களூரு நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க, தனி போக்குவரத்து தீர்ப்பாயம் உருவாக்கப்படும்,'' என, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நம்பிக்கை தெரிவித்தார்.

போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து துறை, பெங்களூரு மாநகராட்சி இணைந்து, டவுன் ஹாலில், 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி நேற்று நடத்தினர்.இந்நிகழ்ச்சியை, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா முன்னிலையில், உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:பெங்களூரு நகரில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.2021ல் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வகிப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடமிருந்து வசூலாகும் அபராத தொகையின், 50 சதவீதத்தை, போக்குவரத்து நிர்வகிப்புக்கு பயன்படுத்த நிதித்துறை அனுமதி அளித்துள்ளது.ஆனால், 100 சதவீதம் அபராத தொகை தரும்படி, நிதித்துறையிடம் வலியுறுத்தப்படும். விபத்துகள் நடக்கும் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை சரி செய்யும்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தப்படும்.இன்னும் ஓராண்டுக்குள் பெங்களூரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், திட்டம் தீட்டப்படும்.இதற்காக, தனி போக்குவரத்து தீர்ப்பாயம் உருவாக்கப்படும். இது குறித்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில், ஆலோசித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X