இந்திய கடல் பகுதி என்கிறீர்கள். எப்போது இந்திய மீனவர்கள் என்கிறீர்களோ அப்போது பிரச்னையும் சரியாகி விடும்...

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்'இந்திய கடல் பகுதி என்கிறீர்கள்; தமிழக மீனவர்கள் என்கிறீர்கள். எப்போது, இந்திய மீனவர்கள் என்கிறீர்களோ, அப்போது இந்த பிரச்னையும் சரியாகி விடும்...'
இந்திய கடல் பகுதி என்கிறீர்கள். எப்போது இந்திய மீனவர்கள் என்கிறீர்களோ அப்போது பிரச்னையும் சரியாகி விடும்...

இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'இந்திய கடல் பகுதி என்கிறீர்கள்; தமிழக மீனவர்கள் என்கிறீர்கள். எப்போது, இந்திய மீனவர்கள் என்கிறீர்களோ, அப்போது இந்த பிரச்னையும் சரியாகி விடும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.



அரசு பள்ளிகளில் புதிதாக, 5.18 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி நியமனம் செய்ய வேண்டும்.
- உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் பீட்டர் ராஜா


'இப்பத் தான் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இதற்கு முன், மிகவும் குறைவாகவே மாணவர்கள் இருந்தனர். அப்போதும், புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டன. எனவே, மாணவர் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல், மாணவர்களுக்கு நல்ல முறையில் கற்பிக்க ஆர்வமாக இருங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் பீட்டர் ராஜா அறிக்கை.



இந்திய கடலில், இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை, பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும். எதிர்காலங்களில் இது போன்ற தாக்குதல்கள் நடக்காத வண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்


'பிரதமர் கண்டித்தால் மட்டும், தாக்குதல் நின்று விடவா போகிறது; ஆக்கப்பூர்வமான தீர்வே அவசியம்...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.



கடந்த, 2003க்கு பின் ரத்து செய்யப்பட்ட, கிராஜிவிட்டி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கருவூல துறையை தனியார் மயமாக்கும் வகையிலான செயல்பாடுகளை கைவிட்டு, பழைய முறைப்படி சம்பளம் வழங்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர்


'எல்லாம் பழைய முறை வேண்டும்; சம்பளம் மட்டும், புதிய முறையில், கூடுதலாக கேட்கிறீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பேட்டி.



வன்னியர்களுக்கு, 20 சதவீத தனி ஒதுக்கீட்டை, தமிழகத்திலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஆதரிக்கின்றனர். இதுவரை, இது தொடர்பாக, ஐந்து கட்ட அறவழி போராட்டம் நடந்துள்ளது. எங்கள் கோரிக்கை ஏற்கப்படா விட்டால், ராமதாஸ் நேரடியாக களம் இறங்கும் நிலை ஏற்படும்.
- பா.ம.க., தலைவர் மணி


'பிற சமுதாயத்தினர் ஆதரிக்காததால் தானே, இந்தப் பிரச்னை இத்தனை ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., தலைவர் மணி பேட்டி.



கடந்த, 1972ல், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி உள்ளிட்டோர், எம்.ஜி.ஆருடன் கையொப்பமிட்டு, கருணாநிதி மீது ஊழல் புகார் கொடுத்தீர்களே...- தன்மானத்தை அடகு வைத்து, தி.மு.க.,வுடன் இப்போது ஏன் கூட்டு வைத்துள்ளீர்கள்?
- பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


latest tamil news




'நடிகர் வடிவேலு பாணியில், 'அது வேற தலைவர்கள்; இப்போது இருக்கும், 'தலைவர்கள்' வேறு பாணி...' என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்...' என, கவலை தெரிவிக்க தோன்றும் வகையில், பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.



தமிழக மீனவர்களைப் பச்சைப் படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைது செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு, தலா, 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'உங்கள் கோரிக்கை, எந்த காலத்திலும், எந்த நாட்டாலும் செய்ய முடியாதது...' என, நெத்தியடியாக கூறத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.



மத்திய அரசின் வழக்குரைஞர் உயர் நீதிமன்றத்தில் கூறியதை வைத்துப் பார்க்கும் போது, தமிழகத்தின் இட ஒதுக்கீடு கொள்கையிலும், மத்திய அரசு கத்தியைத் தீட்டும் நோக்கம் இருப்பது புரிகிறது. தமிழகம் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இதில் கை வைத்தால், தமிழகம் குமுறும் எரிமலையாக வெடித்து எழும்... எச்சரிக்கை.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


'முதல் ஆளாக நீங்கள் தான், போர்க்களத்தில் இறங்குவீர் போலிருக்கிறதே...' என, கிண்டலாக கேட்கத் .தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.



இடஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்ட மராட்டிய சமூகத்திற்கே, மஹாராஷ்டிராவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், மிக மிக பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இதில் தமிழகம் சமூக நீதியின் தொட்டிலாம்!
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


'ஒரு ஜாதிக்கு மட்டும் சமூக நீதி கிடைத்து விடக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு அமைதி காக்கிறதோ...' என, சந்தேகம் கிளப்பத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.



அ.தி.மு.க., கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை; கூட்டணி சுமுகமாக இருக்கிறது. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
- அமைச்சர் ஜெயகுமார்


'என்ன சொல்ல வருகிறீர்கள் என்று மக்கள் குழம்பி, அ.தி.மு.க., கூட்டணி போல குழப்பமாக உள்ளது என நினைக்கப் போகின்றனர்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumalaimuthu L - pavoorchatram,இந்தியா
25-ஜன-202106:56:55 IST Report Abuse
Thirumalaimuthu L எல்லை தாண்டி இலங்கை அரசு தடை விதித்துள்ள பயன்படுத்தக்கூடாத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதே காரணம்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-ஜன-202119:23:50 IST Report Abuse
spr எல்லை தாண்டாதவரை பிரச்சினையில்லை ஆனால் தாண்ட வைப்பவர்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு மீனவர்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் தாண்ட வைத்தவர்களும் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லாதவர்களும் பொய்யாகக்குரல் கொடுக்கிறார்கள் மீனவர்கள் தெரிந்தேதான் எல்லை மீறுகிறார்கள் தண்டிக்கப்படுகிறார்கள் இதனைத்தவறு என்றால் நாளை வீடு புகுந்து கொள்ளையடிப்பவனுக்கும் பரிந்து பேசுவார்களோ
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-ஜன-202116:14:33 IST Report Abuse
vbs manian தமிழகத்தில் தற்சமயம் உள்ள பல தலைகளுக்கு தமிழகத்தை தாண்டி பார்க்க தெரியவில்லையா முடியவில்லையா. தமிழக மீனவர்கள் இலங்கை கடல் படையால் பிடிக்கப்பட்டு துன்புறுவது தொடர்கதையாகி இருக்கிறது. இதற்கு தீர்வாக இந்தியா கோஸ்டல் கார்ட் ஒரு கப்பலை நிரந்தரமாக அந்த கடல் பகுதியில் நிறுத்தி வைக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X