வாஷிங்டன்: அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 1.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அதிவேகமாக பரவியது. இதனால், 219 நாடுகள் பாதிக்கப்பட்டன. உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9 கோடியே 93 லட்சத்து 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 7 கோடியே 13 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.55 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் இந்தியா (1.06 கோடி பேர்), பிரேசில் (88 லட்சம் பேர்) உள்ளன. உயிரிழப்புகளிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4.27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டனர். தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறுபுறம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.
நேற்று (ஜன.,23) ஒரே நாளில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,66,717 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக பிரேசிலில் 61,121 பேரும், இங்கிலாந்தில் 33,552 பேரும், பிரான்சில் 23,924 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய உயிரிழப்புகளில் அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 3,379 பேர் பலியாகினர். மெக்ஸிகோவில் 1,440 பேரும், இங்கிலாந்தில் 1,348 பேரும், பிரேசிலில் 1,176 பேரும், ரஷ்யாவில் 559 பேரும், ஜெர்மனியில் 516 பேரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE