மஹா.,வில் பா.ஜ., வளர்ச்சிக்கு காரணம் பால் தாக்கரே தான்: சஞ்சய் ராவத்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு பால் தாக்கரே தான் காரணம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் 95-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து அக்கட்சி தலைவர்கள் மும்பையின் சிவாஜி பார்க்கில் உள்ள பால் தாக்கரேயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
BJP, PoliticalGrowth, Maharashtra, BalThackeray, SanjayRaut, பாஜக, அரசியல் வளர்ச்சி, மஹாராஷ்டிரா, பால் தாக்கரே, சஞ்சய் ராவத்

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு பால் தாக்கரே தான் காரணம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் 95-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து அக்கட்சி தலைவர்கள் மும்பையின் சிவாஜி பார்க்கில் உள்ள பால் தாக்கரேயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அப்போது சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு பால் தாக்கரே தான் காரணம். சிவசேனா அவர்களுடன் இணையாமல் இருந்து இருந்தால், அவர்களால் ஊரக பகுதிகளில் கட்சியை பலப்படுத்தி இருக்க முடியாது.


latest tamil news


மஹாராஷ்டிராவின் நலனுக்காக மாற்று அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இருப்பதால் சிவசேனா தங்களது கொள்கையில் இருந்து விலகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. எல்லா கட்சிகளும் தங்கள் மாநிலம், நாடு மற்றும் மக்களின் நலன் கருதி அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டியது உள்ளது. அந்த முடிவில் நிலைத்து இருப்பதும், வெற்றி பெறுவதும் தான் முக்கியம். சிவசேனா அதை செய்துள்ளது. இந்தியாவின் பிரபலமான முதல்வராக உத்தவ் தாக்கரே உள்ளார். இதற்காக பால் தாக்கரே மகிழ்ச்சி அடைந்து இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
25-ஜன-202107:32:47 IST Report Abuse
 Muruga Vel பால் தாக்கரேயின் கடைசி பதினைந்து வருடங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது ..தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் தலா ஐந்து ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்ததை கண்டு ஒரு விதமான விரக்தியில் இருந்தார் ... ராஜ் தாக்கரேயும் கட்சியை விட்டு விலகி குடைச்சல் கொடுத்தார். நிதின் கட்கரி மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் கிராமம் கிராமமாக பயணம் செய்து BJP வளர பாடு பட்டார்கள் ..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜன-202102:04:07 IST Report Abuse
M  Ramachandran அறவோன் - Chennai,இந்தியா முதலில் சிவா சேனா பற்றி தெரிந்து கொண்டு அப்பறம் பி ஜெ பீ பற்றி குறை கூறலாம். பால்தாக்கரே தமிழர்களை என்ன சேய்தார் என்று சரித்திரம் தெரியுமா? வியாபாரிகள், அலுவலர்கள் மற்றும் சிறு தொழில் சேய்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் குடும்பங்களை அராஜகம் செயிது மும்பை யை விட்டு வீரட்டினார்கள். மக ராஷ்டிரர்களுக்கு புத்தி கூர்மையான வேலைகள் செய தெரியாது. கஷ்டபட்டுவும் உழைக்க வராது. சமீபத்தில்கூட உ.பி. பீகார் முதலிய இடங்களிலிருந்து கட்டிட வேலை மற்றும் சிறு தொழில்கள் செய்தவர்களை வெரட்டி அடித்தார்கள். அதற்க்கு அந்த அந்த மாநில முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த சேய்திகளையெல்லாம் படியுங்கள். உங்கள் மத நம்பிக்கைக்காக நல்ல எண்ணம் யில்லாவிட்டால் மற்றவர்களை கண்மூடி தனமாக எதிர்க்க வேண்டும் என்று ஏதையாவது எழுதி ( தமிழர்கள் அவர்களால் கஷ்ட பட்டும் கூட) சிவசேனாவை புகழ வேண்டாம்.
Rate this:
Cancel
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
24-ஜன-202119:57:00 IST Report Abuse
RAVINDRAN.G இப்படி சொல்லலென்ன பதவி இருக்காது. அப்போதான் சோறுன்னு சொன்னாங்க அதான் பால்தாக்கரே தயிர்தாக்கரேனு உளறுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X