நோய்வாய்ப்பட்ட எஜமானரை தேடிய நாய்; மருத்துவமனை வாயிலில் தவம் கிடந்து நன்றி!

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அன்காரா: துருக்கியில் தன் எஜமானர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு, அவரது நாய் காத்திருந்த காட்சி வைரலாகியுள்ளது.துருக்கியின் டிராப்ஸன் பகுதியை சேர்ந்த செமல் செண்டுர்க் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது வளர்ப்பு நாயான
SickOwner, Dog, Waited, Hospital

அன்காரா: துருக்கியில் தன் எஜமானர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு, அவரது நாய் காத்திருந்த காட்சி வைரலாகியுள்ளது.
துருக்கியின் டிராப்ஸன் பகுதியை சேர்ந்த செமல் செண்டுர்க் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது வளர்ப்பு நாயான போன்குக், ஆம்புலன்சின் பின்னாலேயே ஓடி வந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை காண மருத்துவமனையின் வாசலிலேயே செல்ல நாய் காத்திருந்துள்ளது. தன் எஜமானர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை தினமும், வாசலில் செமல் வருகைக்காக காத்திருந்தது. மருத்துவமனை ஊழியர்களும் அந்த நாயை விரட்டாமல், அரவணைத்தனர். சிலர் உணவும் வழங்கினர்.


எஜமானரை பார்க்க ஒரு வாரம் மேலாக மருத்துவமனையில் காத்திருந்த பப்பி ! செய்த சேட்டையை அனைவரும் கண்டு ரசித்தனர்

எப்போது நாய் செல்லும் ?



latest tamil news



ஒவ்வொரு முறையும் மருத்துவமனையின் வாசல் கதவு திறக்கும்போதும் உள்ளே ஏக்கத்துடன் எட்டிப்பார்த்து ஏமாற்றமாக வாசலில் உட்கார்ந்துவிடுமாம். கடந்த 20ம் தேதி செமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகே போன்குக் என்ற செல்ல நாய் அங்கிருந்து சென்றுள்ளது. இது குறித்து செமல்லின் மகள் அய்னூர் எகெலி கூறுகையில், ‛என் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் வாசலில் தினமும் காலை 9 மணியளவில் போன்குக் சென்றுவிடும். ஒவ்வொரு நாளும் இரவு எங்களது செல்ல நாயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாலும், அடுத்தநாள் காலையில் மீண்டும் அங்கு சென்று என் அப்பாவிற்காக காத்திருக்கும்,' எப்போது போகும் என்றே எங்களால் அறிய முடியாது என்றார்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தன் எஜமானரை மனிதநேயத்துடன் மருத்துவமனை வாசலில் ஏங்கி காத்திருந்த செல்ல நாயின் பாசப்போராட்டம் அனைவரையும் வியக்க வைத்தது. இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவியது. நாயின் நன்றி விசுவாசத்திற்கு இணையாக மனிதமே தோற்றுப்போகும் என பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்ததும் எஜமானரை பார்த்து நாய் பெரும் பாசத்தை காட்டியது. அவர் நாயை செல்லமாக தடவி கொடுத்து அழைத்து சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜன-202113:51:06 IST Report Abuse
தமிழவேல் "அந்த நாய தூக்கி வெளி போடுடான்னு" சொல்றவனுவோ யாரும் அங்கே இல்லியா ..
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
24-ஜன-202115:11:58 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANSame side goal என்று கேள்விப் பட்டது உண்மை இப்பதான் தெரியுது...
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
24-ஜன-202113:19:32 IST Report Abuse
Narasimhan மிருகங்களை விட கேவலமாக நடப்பவன் மனிதன். மசினகுடி யானையை டயரில் நெருப்பூற்றி கொன்ற கொடூரம். இது ஒரு உதாரணம் மட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X