ராணுவ அமைச்சராக கறுப்பினத்தவர் தேர்வு

Added : ஜன 24, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்காவின் புதிய ராணுவ அமைச்சராக கறுப்பினத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டின் நியமனத்துக்கு பார்லி. யின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ராணுவ அமைச்சராக பதவியேற்க உள்ள முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை ராணுவ அமைச்சராக

வாஷிங்டன்:அமெரிக்காவின் புதிய ராணுவ அமைச்சராக கறுப்பினத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டின் நியமனத்துக்கு பார்லி. யின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ராணுவ அமைச்சராக பதவியேற்க உள்ள முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை ராணுவ அமைச்சராக நியமித்து உள்ளார்.அமெரிக்க சட்டங்களின்படி ராணுவ பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஏழு ஆண்டுகளுக்கு எந்த அரசு பதவியையும் ஏற்க முடியாது.கடந்த 2016ல் ஓய்வு பெற்ற லாயிட் ஆஸ்டின் நியமனத்துக்கு விலக்கு கோரி பார்லி.யின் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் விலக்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில் லாயிட் ஆஸ்டினை அமைச்சராக நியமிக்கும் தீர்மானத்துக்கு செனட் சபையில் 93:2 என்ற அடிப்படையில் ஆதரவு கிடைத்தது.இதையடுத்து அடுத்த வாரத்தில் லாயிட் ஆஸ்டினுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அமெரிக்க ராணுவ அமைச்சராக கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர்பதவியேற்பது இதுவே முதல்முறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X