இயல்பு நிலைக்கு திரும்பிய சீனாவின் வூஹான் நகரம்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
வூஹான்: உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில் இந்த வைரஸ் முதலில் தோன்றிய சீனாவின் வூஹான் நகரம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில் தான் முதல் முதலாக கொரோனா வைரஸ் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவியது. உலகின் முதல் கொரோனா ஊரடங்கும் வூஹான் நகரில் தான் அறிவிக்கப்பட்டது.அந்த நகர


வூஹான்: உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில் இந்த வைரஸ் முதலில் தோன்றிய சீனாவின் வூஹான் நகரம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில் தான் முதல் முதலாக கொரோனா வைரஸ் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவியது. உலகின் முதல் கொரோனா ஊரடங்கும் வூஹான் நகரில் தான் அறிவிக்கப்பட்டது.அந்த நகர மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவிற்கு எதிரான சீனாவின் போராட்டம் மிக விரைவில் முடிவுக்கு வந்தது. அதன்பின் அந்த நகரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
தற்போது முழுமையாக வூஹான் நகரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலை அடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு கொரோனா முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் விரைவில் தன் பணியை துவக்க உள்ளது.கொரோனா வைரஸ் தோன்றிய வூஹானில் இயல்பு நிலை திரும்பி விட்டாலும் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதன் பாதிப்பு இன்னும் குறையவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X