பொது செய்தி

தமிழ்நாடு

சைவப் பணிகளுக்கு கிடைத்த விருது

Added : ஜன 24, 2021
Share
Advertisement
பன்னிரு திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் எழுதிய திருமுறை காலத்தால் முந்தியது. அவரது பெயரால் வழங்கப்படும் தமிழக அரசின் காரைக்கால் அம்மையார் விருதுக்கு மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ஞானப்பூங்கோதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மதுரை தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறையில் பேராசிரியையாக பணியாற்றியவர் ஞானப்பூங்கோதை. மதுரை காமராஜ் பல்கலை சைவ சித்தாந்த
சைவப் பணிகளுக்கு கிடைத்த விருது



பன்னிரு திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் எழுதிய திருமுறை காலத்தால் முந்தியது. அவரது பெயரால் வழங்கப்படும் தமிழக அரசின் காரைக்கால் அம்மையார் விருதுக்கு மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ஞானப்பூங்கோதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மதுரை தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறையில் பேராசிரியையாக பணியாற்றியவர் ஞானப்பூங்கோதை. மதுரை காமராஜ் பல்கலை சைவ சித்தாந்த துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவருக்கு சைவப் பணிகளில் அதிக ஈடுபாடு. வீணை, தமிழிசையிலும் சிறந்து விளங்கும் இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக திங்கட்கிழமை தோறும் திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளையாடல் புராணம், சொக்கநாதர் வெண்பா, பெரியபுராணம் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். தற்போது சைவ சித்தாந்த சபை மூலம் ஆன்லைனில் வகுப்புகள், சொற்பொழிவுகள் நடத்துகிறார்.
மதுரை திருநகர் திருமுறை மன்றம் சார்பில் ஒவ்வொரு மாத திருவாதிரை தினத்தன்று பக்தர்கள் யார் வீட்டிலாவது திருவாசகம் முற்றோதல் ஆறு மணி நேர நிகழ்ச்சியாக நடத்துகிறார். 2003 முதல் தற்போது வரை தொய்வின்றி பாடல்களை ராகங்களாக பாடி பரவசப்படுத்துகின்றனர்.சைவ சித்தாந்த சபையில் 25 ஆண்டுகளாக அதிகம் பேசியது தேவாரம் தான். அடுத்ததாக திருவாசகம், பெரியபுராணம், காரைக்கால் அம்மையார் பாடல்கள் பாடி வருகிறார். சைவத்தில் இவரது பணிகளுக்காக தமிழக அரசு காரைக்கால் விருதுக்கு இவரை தேர்வு செய்துள்ளது.

விருது குறித்து அவர் கூறியதாவது: காரைக்கால் அம்மையாரின் அந்தாதி இலக்கியம், இரட்டை மணிமாலை பிடிக்கும். சைவம், இசைக்கு முன்னோடி காரைக்கால் அம்மையார். அவரது பெயரில் விருது வழங்குவது கவுரவமாக நினைக்கிறேன். கணவர் மோகனசுந்தரம், ஓய்வு பேராசிரியர் ஆனந்தராஜன், திருவாவடுதுறை, தருமபுரி ஆதினங்கள் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர், என்றார்.இவரிடம் பேச: 98947 15638

எம்.எம்.ஜெ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X