பவுர்ணமி நிலவே மிருதுவான இவளின் முகத்துக்கு முன்னால் மென்மை இழக்கும். இவளது படபடக்கும் கருமை இமை கண்டு கருவண்டும் கிறங்கிப்போய் உறங்கத் துடிக்கும். தேன்சொட்டும் சொற்களால் வசீகரிக்கும் பன்முகத்தாள் இவள்... தொகுப்பாளினி டொஷிலா, தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தது
நீங்கள்...
சொந்த ஊர் சேலம் அருகே தம்மம்பட்டி. எம்.ஏ., இதழியல் படிப்பு. ஆர்.ஜே., 'டிவி' தொகுப்பாளினி, செய்தி வாசிப்பாளர்... சில வெப் சீரிஸ்களில் நடிக்கிறேன். ஊடகத் துறையில் 15 ஆண்டு பயணம்.
உங்கள் பயணம்
2005 முதல் 2011 வரை கல்லுாரி படிக்கும் போதே ஆர்.ஜே.,வாக பணியாற்றத் தொடங்கி 6 ஆண்டுகளாக பயணித்தேன். 2013 முதல் 'டிவி'க்கள், ஆடியோ ரிலீஸ் நிகழ்வுகளில் தொகுப்பாளினியாக பயணிக்கிறேன். ஆயிரம் ஜன்னல் வீடு போன்ற வெப் சீரிஸ், விளம்பரங்களிலும் நடிக்கிறேன். தவிர ஆர்.ஜே., வகுப்புகளையும் நடத்துகிறேன்.
ஆர்.ஜே., -- வி.ஜே., என்ன வித்தியாசம்
வீடியோ ஜாக்கிக்கு பாதியை விஷூவலே பேசிவிடும். நிகழ்ச்சிகளை பொறுத்து தொகுப்பாளர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் ஆடை அணிவது, முகம், நமது செயல்பாடு அனைத்துமே முக்கியம். ஆர்.ஜே., என்பது சிறியது கிடையாது. எப்.எம்., குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இருக்கக் கூடியது. கோவை, மதுரை, சென்னை என பல உண்டு. அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, பேச்சுவழக்கு, கலாசாரம் போன்றவற்றை பேசக்கூடிய களமாக உள்ளது. அதற்கேற்றாற் போல் எங்கள் பேச்சு இருக்க வேண்டும்.
கேமரா முன் முதல் அனுபவம்
நான் ரேடியோவில் பணிபுரியும் போது 'டிவி' வாய்ப்புகள் வந்தன. 2011க்குப்பின் வாழ்வில் ஒரு இடைவெளி வந்தது. அப்போது கிடைத்தது இந்த கேமரா முன்பான அனுபவம். என் மனதில் ஆர்.ஜே., பற்றிய எண்ண ஓட்டங்கள் ஓடினாலும் இன்று வரை பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு ஏதாவது...
பெண்கள் நன்றாக படித்து, வேலைக்கு செல்ல வேண்டும். எவரையும் சார்ந்திருக்க கூடாது. பெண்களுக்கு நகைச்சுவை வேணும். நகை ஆசைதான் கூடாது. சுதந்திரமாக நடமாட நகை ஒரு இடையூறுதான்.
கொரோனா கால அனுபவம்...
வீட்டில் இருந்தே பணிகளை தொடர்ந்தேன். மக்களை சந்தோஷப்படுத்த, மனதை இலகுவாக்க சமூக வலை தளங்களில் நல்ல பாஸிட்டிவ் வீடியோக்களை பதிவிட்டேன்.
2021ல் எதிர்பார்ப்பு...
ஒர்க் ப்ரம் ேஹாமில் பணியாற்றியதால் சோம்பல் தெரிகிறது. மறுபடியும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். நிறைய படங்களுக்கு டப்பிங் கொடுத்துருக்கணும். மக்களை சந்திக்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிளை தொடர்ந்து செய்ய வேண்டும்.
இன்ஸ்டாகிராம் முகவரி: toshitalks
சம்யு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE