அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: ராகுல்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
திருப்பூர் : தமிழில் பேசினால் ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள் . ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மக்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: டில்லியில் உள்ளவர்கள் தமிழ் மக்களை மதிக்கவில்லை. தமிழ் கலாசாரத்தை மதிக்கவில்லை. தமிழில் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என எண்ணுகிறார்கள்.
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

திருப்பூர் : தமிழில் பேசினால் ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள் . ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மக்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: டில்லியில் உள்ளவர்கள் தமிழ் மக்களை மதிக்கவில்லை. தமிழ் கலாசாரத்தை மதிக்கவில்லை. தமிழில் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என எண்ணுகிறார்கள். ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். அதுதான் உண்மை.

தமிழ் பற்றி மிக்க தமிழக மக்களை பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் கலாசாரம், பண்பாட்டை கற்று கொள்ள வேண்டும். என்னுடைய பாட்டி இந்திரா முதல், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல மரியாதையை கொடுத்து வருகின்றனர். நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவன்.


latest tamil news



நான் தமிழன் இல்லை. ஆனால், தமிழ்மொழியை மதிக்கிறேன். தமிழகத்தில் இயற்கை வளங்கள், வாய்ப்புகள், வசதிகள் அதிகம். இருந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு வளர்ச்சி எட்டவில்லை. ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உள்ளிட்டவை தமிழக மக்களை பாதிப்படைய செய்துள்ளதே காரணம்.

புதிய வேளாண் சட்டங்களால், கடந்த ஒரு மாதமாக விவசாயிகள்,கடும் குளிரிலும் டில்லியில் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், மத்திய அரசு பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.தற்போதைய தமிழக அரசை, மோடி வழிநடத்துகிறார். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்குமானால், மக்களுக்கு தேவையானதை காங்கிரஸ் செய்யும் என்பதை உறுதியாக கூறுகிறேன். அதை சொல்லவே இங்கு வந்துள்ளேன். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும், மரியாதைக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - CHENNAI,இந்தியா
25-ஜன-202106:53:31 IST Report Abuse
Kannan ஏமாறமாட்டார்கள் என்று சொல்லி ஏமாற்றப்பார்க்கிறவரே, உங்கள் பேச்சும், தமிழ்நாட்டில் உங்கள் கட்சித் தலைவர் அழகிரியின் பேச்சும்,பார்த்திபன்-வடிவேலு காமேடி மாதிரி,மக்கள் எப்போதும் வயிறு வலிக்க சிரித்து ஆரோக்கியமாக வாழவைக்கும் ஸ்ட்ரெஸ்-பஸ்டர்ஸ் . அடிக்கடி தமிழகம் வந்துதொடரட்டும் உங்கள் சேவை.அடுத்து எந்த ஊருக்கு விஸிட்?
Rate this:
Cancel
Saravanan - Chennai,இந்தியா
24-ஜன-202123:26:08 IST Report Abuse
Saravanan அப்ப வயநாடு மக்கள் ஏமாறுவாங்க னு சொல்றிங்களா? இல்ல தமிழர்கள் ஏற்கனவே நகை கடன்னு சொல்லி ஏமாந்துட்டாங்க னு சொல்றிங்களா?
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
24-ஜன-202122:09:12 IST Report Abuse
ayyo paavam naan தமிழக மக்கள் தான் ஏமாற மாட்டார்கள் என்று தெரிந்துவிட்டதே, பின் எதற்கு இங்கே வந்து இருக்கிறீர்கள் பப்பு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X