பொது செய்தி

தமிழ்நாடு

விஜய் - சந்திரசேகர் இடையே அதிகரிக்கும் விரிசல்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை : அரசியல் விவகாரத்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் - நடிகர் விஜய் இடையேயான அப்பா - மகன் உறவில் விரிசல் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து விட்ட நடிகர் விஜய்யின் வளர்ச்சியில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேப்போன்று விஜய்யின் ரசிகர் மன்றத்தை பெரியளவில்
SAChandrasekar, Actorvijay, Vijay, SAC,

சென்னை : அரசியல் விவகாரத்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் - நடிகர் விஜய் இடையேயான அப்பா - மகன் உறவில் விரிசல் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து விட்ட நடிகர் விஜய்யின் வளர்ச்சியில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேப்போன்று விஜய்யின் ரசிகர் மன்றத்தை பெரியளவில் ஒருங்கிணைத்தவரும் எஸ்.ஏ.சந்திரசேகர் தான். மகனை அடுத்து அரசியலில் களமிறக்கி அழகு பார்க்க நினைக்கிறார். இதில் விஜய்க்கும் விருப்பம் தான், ஆனால் சில ஆண்டுகள் போகட்டும் என நினைக்கிறார். மகன் தற்போது அரசியலில் களமிறங்க ஆர்வம் காட்டாததால் தானே கட்சி தொடங்கும் வேலையில் இறங்கிவிட்டார்.

சில மாதங்களுக்கு 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பத்தார் சந்திரசேகர். இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ''எனக்கும், அந்தக்கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, அந்த கட்சியில் யாரும் இணைய வேண்டாம். மக்கள் இயக்கம் பெயரை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என அறிக்கை வெளியிட்டார். அப்போதே அப்பா - மகன் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின் ஷோபனா சந்திரசேகர் இருவரையும் சமாதானம் செய்ததாக கூறப்பட்டது. மேலும் கட்சி ஆம்பிக்கும் முடிவையும் சந்திரசேகர் கைவிட்டிருந்தார்.


latest tamil news
இந்நிலையில் மீண்டும் கட்சி தொடங்கும் முடிவில் களமிறங்கி உள்ளார் சந்திரசேகர். இதற்கிடையே தன் பெயரில் கட்சி ஆரம்பிக்க, விஜய் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சி ஆரம்பித்தால், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் என கருதிய விஜய், இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பினார். இதனால் 'அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி' என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. 'தேர்தல் அறிவிப்புக்குள், புதிய கட்சியை ஆரம்பித்து, நிர்வாகிகளை நியமிக்கும் பணியில், அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தனது தந்தைக்கு மீண்டும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளார் விஜய். இதுதொடர்பாக விஜய்யின் வக்கீல் எஸ்.குமரேசன் அனுப்பி உள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது : ''நடிகர் விஜய்யின் ஒப்புதலின்றி கடந்த ஜூன் 8ல், 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியும், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பதிவு செய்தார். இதற்கு அப்போதே ஒரு அறிக்கை கொடுத்தார் விஜய். தற்போது சந்திரசேகரின் எந்த நடவடிக்கைக்கும் விஜய் அங்கீகாரம் அளிக்கவில்லை. அவரது கட்சியிலோ அல்லது அமைப்பிலோ விஜய்யின் பெயர், போட்டோவை தவிர்க்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பா சந்திரசேகருக்கு மகன் விஜய் அனுப்பிய மீண்டும் ஒரு எச்சரிக்கை நோட்டீஸால் அப்பா - மகன் உறவிலான விரிசல் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
27-ஜன-202102:19:18 IST Report Abuse
Ram அப்ப்பா அப்பப்ப
Rate this:
Cancel
25-ஜன-202116:08:39 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யார் வேணாலும் அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களை சந்தித்து ஆதரவு பெற்று ஆட்சி அமைக்கலாம் ஊழல் கழகம்களை வீழ்த்த வேண்டும் . லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்
Rate this:
Cancel
25-ஜன-202116:06:16 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) விஜய் கமல் இணைத்தால் மாற்றம் ஓரளவு சாத்தியம் . ஊழல் கழகங்களுக்கு இணையாக இவர்களிடம் தான் பணம் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X