அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாட்டிற்காக விளையாடியது பெருமை: நடராஜன்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சேலம்: பிறந்த குழந்தையை பார்ப்பதை விட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக பார்க்கிறேன் என தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியுள்ளார்.சேலம், சின்னப்பம்பட்டியில் நிருபர்களை சந்தித்த நடராஜன் கூறியதாவது: ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடியது, சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது. ஆஸி.,யில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என
நடராஜன், கிரிக்கெட், இந்தியா, Natarajan, India, cricket,

சேலம்: பிறந்த குழந்தையை பார்ப்பதை விட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக பார்க்கிறேன் என தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியுள்ளார்.

சேலம், சின்னப்பம்பட்டியில் நிருபர்களை சந்தித்த நடராஜன் கூறியதாவது: ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடியது, சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது. ஆஸி.,யில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது. சக வீரர், பயிற்சியாளர்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர். அறிமுக வீரர் என கருதாமல் அணியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர்.பிற்நத குழந்தையை பார்ப்பதை விட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன்.


latest tamil news


ஆஸி.,யில் வெற்றி கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மட்டுமின்றி, அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடியதால் தான் வெற்றி கைவசமானது.ஒற்றை சிந்தனையுடன் கடினமாகவும் உண்மையாகவும் உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சியாக உள்ளேன். கடின உழைப்பு நிச்சயம் பலன் கொடுக்கும் என்பது தான் அனைவருக்கும் நான் கூற வரும்புவது. இந்தியாவுக்காக மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
24-ஜன-202122:31:49 IST Report Abuse
Vena Suna நீ நல்ல திறமை வாய்ந்தவன். நீ பார்த்த வெற்றி ஒரு மலையின் ஆரம்பமே....நீ மேலும் மேலும் வெற்றிகளை குவித்து நம் தமிழ்நாட்டிற்கு விளையாடி மிகவும் பெருமை பெற்ற வெங்கட்ராகவன் ,க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ,அஸ்வின் போல சாதனையாளர் ஆகா வேண்டும். ஸ்ரீகாந்த் கவாஸ்கர் போல ஆடாமல் அதிரடியாக ஆடி தனெக்கென்று தனி இடம் பெற்றுள்ளார். அஸ்வின்னும் அப்படி தான்.....பெரிய திறமை.....வெங்கட்ராகவன் உலக கோப்பைக்கு இரண்டு முறை தலைவன் இந்தியாவிற்கு..... அது போல நீ சாதனை என்னும் மலையின் உச்சத்தை தொட வேண்டும்...சச்சின் போல இருக்க வேண்டும்....அவரது மட்டை தான் பேசும்....அதிகம் பேச மாட்டார்....வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
24-ஜன-202120:07:56 IST Report Abuse
Natarajan Ramasamy மனதார வாழ்துகிறோம். உங்களின் யாக்கர் திறமை உங்களை மேண்மைக்கு கொண்டுபோக உதவியது . பேட்டிங்கும் வேண்டும்.அஸ்வின் போல திறமையை விரிவாக வளர்த்துக்கொள்வது மிக அவசியம். உங்கள் கிராம வாலிபர்களையும் திறமைசாலிகளாக்க உதவுங்கள்.கிராமத்தில் இருந்தாலும் தினம் கிரிக்கெட் பயிற்சியிலேயே இருங்கள். வெற்றி நிச்சயம்
Rate this:
24-ஜன-202122:03:56 IST Report Abuse
R. SUBRAMANIANமுக்கியமாக தொடரை வென்று விட்டோம் என்ற தலைகனம் கூடாது. ஏதோ நாலு காசு கையில் கிடைத்து விட்டது என்பதற்காகா பகட்டான வாழ்வோ ஆடம்பரமான காரோ வேண்டாம்....
Rate this:
Cancel
Indianதமிழன் - chennai,இந்தியா
24-ஜன-202119:15:06 IST Report Abuse
Indianதமிழன் BCCI- இந்திய அரசாங்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? கிரிக்கெட் விளையாடுவது BCCI. என்ற கிளப் க்கு மட்டும்தான். நாட்டிற்கு அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X