பொது செய்தி

இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் வங்கதேச ராணுவம்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், முதல்முறையாக வங்கதேச ராணுவத்தினர் பங்கேற்க உள்ளனர்.குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள்(ஜன.,26) டில்லியில் பிரம்மாண்ட விழா நடக்க உள்ளது. முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற உள்ளது. இந்த ராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச ராணுவமும் பங்கேற்க உள்ளது. அந்நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்கள் ஒரு
குடியரசு தினம், வங்கதேசம், ராணுவம், வங்கதேச ராணுவம்

புதுடில்லி: டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், முதல்முறையாக வங்கதேச ராணுவத்தினர் பங்கேற்க உள்ளனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள்(ஜன.,26) டில்லியில் பிரம்மாண்ட விழா நடக்க உள்ளது. முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற உள்ளது. இந்த ராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச ராணுவமும் பங்கேற்க உள்ளது. அந்நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்கள் ஒரு குழுவாகவும், ராணுவ இசைக்குழுவினர் ஒரு குழுவாகவும் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news



இது தொடர்பாக வங்கதேச ராணுவ குழுவுக்கு தலைமை ஏற்கும் ராணுவ அதிகாரி ஹைதர் சவுத்ரி கூறுகையில், இந்தியாவின் 72வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பது எங்களுக்கு கிடைத்த பெருமை. வங்கதேசம் உருவாகி 50வது ஆண்டு கொண்டாடப்பட உள்ள நிலையிலும், வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்த நாள் நடக்கும் போது, எங்களது நட்பு நாடு இந்தியாவின் குடியரசு தினத்தில் பங்கேற்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muru Chidambaram - virudhunagar,யூ.எஸ்.ஏ
25-ஜன-202107:56:59 IST Report Abuse
Muru Chidambaram நம் ராணுவ ரகசியங்களை, படை பலங்களை இதான் சாக்கு என்று ஊடுருவி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
24-ஜன-202118:35:30 IST Report Abuse
சிவம் எதற்காக வங்க தேசத்தை சேர்க்க வேண்டும். இதனால் நாம் என்ன சாதிக்க போகிறோம். இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கும் கூட்டம் இவர்கள். இவர்களுக்காக பாகிஸ்தானுடன் போரிட்ட இந்தியா என்ற விசுவாசம் இல்லாமல், வங்க தேசத்து இந்து மக்களை கொடுமை படுத்தும் நாடு. மோடிஜி ஆட்சியில் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பதினால் இவர்கள் நல்லவர்கள் ஆகிவிடமாட்டார்கள். சோ ராமசாமி ஒரு முறை சொன்னார். சீனாவுடன் நல்லுறவு என்பது தேவை ஏற்படும்போது மட்டுமே. அவர்களை எப்போதும் நம்ப முடியாது. பாகிஸ்தானும், வங்க தேசமும் அப்படித்தான்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜன-202119:19:14 IST Report Abuse
Endrum Indianஇதன் உள்குத்து இந்த இடை தரகர்கள் போராட்டம் ஏதாவது இடைஞ்சல் நடந்து வங்காள ராணுவத்தை காத்து இந்த இடை தரகர்கள் கோல்மால் செய்தார்கள் என்று சொல்லி உலக பச்சாதாபத்தை ஏற்று இந்த இதை தரகர்களை ஒழிக்கத்தான் இந்த என்றுமே நடவாத இந்த மாற்றம்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202118:14:41 IST Report Abuse
J.V. Iyer இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை வளைத்துப்போட ஒரு நாடு பேயாக அலைகிறதே, தெரியாதா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X