பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலைக்கு புதிதாக ஆறு வனவர்கள் நியமனம்

Added : ஜன 24, 2021
Share
Advertisement
கூடலூர்: தமிழக வனத்துறையில், வனக்காப்பாளர்களாக பணியாற்றி வந்த 164 பேருக்கு, வனவர்களாக, நேற்று, தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியது. இதில், பதவி உயர்வு பெற்ற சுரேஷ்குமார், மசனன், குமார், காலன், சிவகுமார், வி.சுரேஷ்குமார் ஆகிய ஆறு பேர், முதுமலை புலிகள் காப்பக வனவர்களாக நியமிக்கப்பட்டு, பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, யானை, இறந்த பகுதியில், பணியாற்றி வந்த வனவர் சுரேஷ்,

கூடலூர்: தமிழக வனத்துறையில், வனக்காப்பாளர்களாக பணியாற்றி வந்த 164 பேருக்கு, வனவர்களாக, நேற்று, தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியது. இதில், பதவி உயர்வு பெற்ற சுரேஷ்குமார், மசனன், குமார், காலன், சிவகுமார், வி.சுரேஷ்குமார் ஆகிய ஆறு பேர், முதுமலை புலிகள் காப்பக வனவர்களாக நியமிக்கப்பட்டு, பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, யானை, இறந்த பகுதியில், பணியாற்றி வந்த வனவர் சுரேஷ், முதுமலை சீகூர் பகுதிக்கு மாற்றப்பட்டு, மசினகுடி வனவர் சித்தராஜ் அப்பகுதி வனவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதுமலை துணை இயக்குனர் ஸ்ரீகாந்த கூறுகையில், 'பதவி உயர்வு மூலம், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வானவர்களுக்கு காலியான இடங்களில், பணி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக, சிங்கார வனவர், சீகூருக்கு மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு, அனுபவம் வாய்ந்த வனவர் நியமிக்கப்பட்டுள்ளார்' என, கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X