பொது செய்தி

இந்தியா

மும்பையை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி!

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை: அகில இந்திய விவசாய சபை சார்பில் ஆயிரக்கணக்கான மஹாராஷ்டிர விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் மும்பை நோக்கி பேரணி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டில்லியை முற்றுகையிட்டு 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்
AntiFarmLaws, Maharashtra, Rally, மஹாராஷ்டிரா, விவசாயிகள், வேளாண் சட்டங்கள், பேரணி

மும்பை: அகில இந்திய விவசாய சபை சார்பில் ஆயிரக்கணக்கான மஹாராஷ்டிர விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் மும்பை நோக்கி பேரணி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.


latest tamil news



மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டில்லியை முற்றுகையிட்டு 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் இச்சட்டங்களை நிறுத்தி வைத்து, பிரச்னைகளை ஆராய குழு அமைத்துள்ளது. மத்திய அரசு 18 மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.


latest tamil news


Advertisement


குடியரசு தினத்தன்று டில்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணிக்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சிறு சிறு விவசாய சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் சபை என்ற பெயரில் ஒன்றிணைந்து நாசிக்கிலிருந்து 180 கி.மீ தூரம் உள்ள மும்பைக்கு சனிக்கிழமை பேரணி தொடங்கினர். இன்று மாலைக்குள் அவர்கள் மும்பை வந்தடைவார்கள். பின்னர் ஆசாத் மைதானத்திலிருந்து நாளை பேரணி நடத்த உள்ளனர்.


latest tamil news




இந்த பேரணியில் ஆளும் கட்சியில் அங்கும் வகிக்கும் தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் பங்கேற்பார் என கூறப்படுகிறது. முன்னதாக இவர் வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசை எச்சரித்திருந்தார். போராடும் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறினால் மத்திய அரசு விளைவுகளை சந்திக்கும் என்று கூறியிருந்தார். விவசாயிகளின் பொறுமையை சோதிக்கக்கூடாது என்றார்.


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandiyan - Chennai,இந்தியா
25-ஜன-202107:34:11 IST Report Abuse
Pandiyan விவசாய சட்டத்தை எதிர்த்து நடத்தப்படும் இந்த பேரணியும் ஒரு தீவிரவாத கும்பலால் நடத்தப்படுகிறது என்று பிஜேபியின் தலைகள் சொல்ல வாய்ப்புகள் உள்ளன ..
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
25-ஜன-202105:58:45 IST Report Abuse
s t rajan அரசியல் கட்சிகள் தன் பண பலத்தை காண்பிக்கின்றன. நாட்டையும் விவசாயிகளின் நலனையும் மதிக்காத அரசியல் வியாதிகளை ஏன் ரஷ்யா, சீனா போன்ற அரசுகளைப்போல் அதிர்ச்சி வைத்தியம் செய்து ஒடுக்கக் கூடாது. சுதந்திரத்தை பேச்சுரிமையை அளவுக்கு மீறி தவறாக பயன் படுத்துபவர்களை கடுமையாகத் தண்டிக்க மத்திய அரசு இன்னமும் தயங்கக் கூடாது.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜன-202100:30:02 IST Report Abuse
தமிழவேல் எல்லாம், கமிஷன், மண்டி ஏஜென்ட், தீவிர, சமூக விரோதிகள், டாஸ்மாக், டம்ளர், ஓசி பிரியாணி டுமீளன்கள். சரிதானா சங்கிகளா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X