நெய்வேலி : நெய்வேலியில் திருக்குறள் மீது அதிதீவிர பற்றுடைய மாறுபட்ட சிந்தனையாளரான எழுத்தாளர் ராமலிங்கம் தனது பிள்ளைகளின் திருமண விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் போதே திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி அசத்துகிறார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் வட்டம் 12 ஐ சேர்ந்தவர் ராமலிங்கம்.55. என்.எல்.சி., சி.டி.ஓ., சிவில் துறையில் துனை பொதுமேலாளராக பணியாற்றிவருகின்றார். மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர். இவரது மனைவியும் எழுத்தாளர் என்பது கூடுதல் பெருமை. இருவரும் இணைந்து எழுதிய பல புத்தகங்கள் நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள்.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த தமது மூத்த மகனின் திருமண வரவேற்பில் திருக்குறளின் இன்பத்து பால் பகுதிக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரை மற்றும் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் அதன் 10 குறளின் கருத்தை மையமாக கொண்டு நாடக வடிவமும் எழுதி புத்தகத்தை வெளியிட்டு தமது பொருட்செலவில் அனைவருக்கும் இலவசமாக வழங்கினார்.தற்போது இன்று (25ம் தேதி) நடக்க உள்ள தமது மகளின் திருமண வைபவத்திற்கும் திருக்குறளின் அறத்துப்பால் பகுதிக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரை மற்றும் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் அதன் 10 குறள்களின் கருத்தை மையமாக கொண்டு நாடக வடிவத்துடன் எழுதி புத்தகத்தை தமது பொருட்செலவில் திருமண அழைப்பிதழோடு திருக்குறள் புத்தகத்தை வழங்கி அசத்தியுள்ளார்.அடுத்து நடக்க உள்ள தமது இளைய மகனின் திருமண வைபவத்தின் போதும் திருக்குறளின் பொருட்பால் பகுதி அடங்கிய புத்தகத்தை வழக்கம் போல் வெளியிட திட்டமிட்டுள்ளார். திருக்குறளின் மீது பற்றுக்கொண்டோர் புத்தகத்தை அவரிடமிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தொடர்புக்கு 94434 97700.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE