இது டிரெய்லர் தான்! - அசாமில் அமித்ஷா பேச்சு!

Added : ஜன 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோக்ராஜ்கர்: அசாமில் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க., கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, அசாம் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான டிரெய்லர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனேவால் தலைமையிலான பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு 6 மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

கோக்ராஜ்கர்: அசாமில் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க., கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, அசாம் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான டிரெய்லர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.latest tamil news


வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனேவால் தலைமையிலான பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு 6 மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா அசாம் சென்றுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி அசாமில் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனையடுத்து அமித்ஷா, போடோலாந்து பிராந்தியமான கோக்ராஜ்கர் நகருக்கு இன்று சென்றார். போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற்றது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட அக்கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க., கூட்டணி பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளது.
இன்று நடந்த நிகழ்ச்சியில் போடோலாந்து இயக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அரசின் நிதியுதவிகளை அமித்ஷா வழங்கினார்.
பின்னர் பேசியவர், “போடோலாந்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. பிராந்திய தேர்தல்கள் அமைதியான முறையில் நடந்துள்ளன. இப்பகுதி வளமடையும். போடோ பிராந்தியத்தில் சாலை அமைப்புக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது போடோலாந்து வளர்ச்சியின் பாதையில் நடக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த பிராந்தியம் ஒரு காலத்தில் ரத்தக் களறியாக காணப்பட்டது. தற்போது அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளது.” என்றார்.


latest tamil newsமேலும், போடோலாந்து ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வடகிழக்கின் அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதி என்றார். போடோலாந்து ஒப்பந்தம் கையெழுத்தான போது தன்னிடம், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்கும் படி மோடி கூறியதாக தெரிவித்தார்.
தற்போது போடோ மற்றும் போடோ அல்லாதவர்களை சேர்ந்து பார்க்க முடிகிறது. இது பிரித்தாண்டவர்களுக்கான பதில் என்று கூறினார். பா.ஜ.க., மற்றும் யு.பி.பி.எல்., ஒன்றிணைந்து தேர்தலில் வென்றிருப்பது, அசாம் தேர்தலுக்கான ஒரு டிரெய்லர் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal,சவுதி அரேபியா
25-ஜன-202111:57:31 IST Report Abuse
Raj ஆறு வருசமா டிரெய்லர் தானே ஒட்டிக்கிட்டு இருக்கீங்க... மக்களுக்கு நல்லதா முன்னேற்றம் ஒன்னும் வந்ததா இல்லை
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
25-ஜன-202110:16:42 IST Report Abuse
Hari இந்த இருவர் கூட்டணி ,சிவனேன்னு உலகையே சிறந்த மாநிலமாக ஆக்க பாடுபட்டுக்கொண்டு குஜராத்தில் இருந்தது ,அவர்களை சோனியா ,சிதம்பரம் கருணாநிதி போன்றவர்கள் பலவழிகளிலும் தொந்தரவை கொடுத்து குஜராத்தை விட்டே வெளியேற்றினார்கள் அதன் விளைவு இன்று உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது வாழ்த்துக்கள் நியூட்டனின் மூன்றாம் விதி சிறப்பாக வேலை செய்கிறது. அதாவது எந்த ஒரு ஆற்றல் வெளிப்படும்போது அது வீணாவதில்லை.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202111:50:28 IST Report Abuse
Malick Rajaகுருடாயில் 110 டாலராக இருந்த போது பெட்ரோல் விலை ரூ 67 ..இன்று குருடாயில் 35 டாலரில் இருக்கும்போது பெட்ரோல் ரூ 90 க்கு ..ஓ ... இதுனாலே தான் உலகமே உற்று நோக்குகிறது இந்தியாவை . ஆளுமை திறன் மிகுந்தவர்கள் .....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202104:37:56 IST Report Abuse
J.V. Iyer ஒவ்வொரு மாநிலத்திற்கும் அமித்ஷாஜி போன்றவர்கள் உருவாக்கப்படவேண்டும். அப்போதுதான் இந்தியா (தல) வலிமை பெறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X