'காங்., ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் அதிகரிக்கும்'

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கவுகாத்தி: ''அசாமில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்துக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்கும்,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா எச்சரித்துள்ளார்.அசாமில், முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், போடோலாந்து உள்ளிட்ட இடங்களில், நடந்த
காங்கிரஸ், பாஜ, அமித்ஷா, பா.ஜ., உள்துறை அமைச்சர்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம்,

கவுகாத்தி: ''அசாமில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்துக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்கும்,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா எச்சரித்துள்ளார்.

அசாமில், முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், போடோலாந்து உள்ளிட்ட இடங்களில், நடந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், போராட்டக் குழுக்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.இதன் வாயிலாக, இப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், கலாசாரம், மொழி உள்ளிட்டவை பாதுகாக்கப்படுவதுடன், அமைதியும், வளர்ச்சியும் ஏற்படும்.பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு மட்டுமே, அசாமை ஊழல், பயங்கரவாதம் இல்லாத மாநிலமாக மாற்றும்.

இங்கு காங்., ஆட்சியில் இருந்த போது, மாநிலம் ரத்தக்களரியாக மாறியது; ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் பயங்கரவாதத்துக்கு பலியாயினர்.அசாமில், காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்கும் வகையில், அனைத்து வழிகளையும் திறப்பர்.ஏனெனில், அவர்கள் தான் காங்.,கின் ஓட்டு வங்கி. பா.ஜ., அரசால் மட்டுமே, ஊடுருவல்களை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMAR. S - GUJARAT ,இந்தியா
25-ஜன-202111:30:53 IST Report Abuse
KUMAR. S ஊடுருவல் எங்க ஆட்சில கொஞ்சம்தான்...அவங்க வந்தா அதிகரிக்கும்னு சொல்றார்..
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
25-ஜன-202111:25:04 IST Report Abuse
Srinivas கான்கிராஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் அதிகமாகிவிடுமாம்...சொல்றாரு கேட்டுக்கோங்க மக்களே. இவர் மகன் ஒரு சில வருடங்களிலேயே பக்கோடா வியாபாரம் செய்து பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியா ஆகிட்டாரு. அதைப்போலவே வேலை கிடைக்காத எல்லோரும் பக்கோடா செய்து வியாபாரம் செய்யலாம்னு சொல்றாரு...கேட்டுக்கோங்க மக்களே...அவர் சொல்ற மாதிரி செய்து வாழ்க்கையில் முன்னேற பாருங்க....
Rate this:
25-ஜன-202114:58:58 IST Report Abuse
ஆரூர் ரங்இதுபோல அவதூறாக எழுதியவர்கள் மீது ஜெய் ஷா வழக்குப் போட்டுள்ளார்.☻ ஆசையா இருந்தா உமது அட்ரசையும் அவருக்கு அனுப்பு. அதோடு ஜைஷா வைத்துள்ள பல கோடி கடனையும் அடைக்க உதவுங்க ஸ்ரீனிவாஸ் எனும் ஷா நவாஸ்...
Rate this:
Cancel
25-ஜன-202109:34:40 IST Report Abuse
ஆப்பு அருணாச்சலில் ஊடுருவல் யார் ஆட்சியில்?
Rate this:
25-ஜன-202110:49:36 IST Report Abuse
ஆரூர் ரங்நேருவே அருணாசலை கைவிட்டார்.அப்போது பிடித்த பகுதிகளில் தான் சீனா கட்டுமானம் நடத்துகிறது . அட நேரு அசாமைக்கூட கைவிடுவதாக ரேடியோவில் கண்ணீர்😢.பிரியாவிடை செய்தி அளித்தார். கோழை நம்பர் ஒன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X