சோனியாவின் தமிழ் பேச்சு!

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாடு, அடுத்த மாதம் சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பிரியங்கா பங்கேற்று, சோனியா பேசிய, 'வீடியோ'வை வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்த வீடியோவில், சோனியா தமிழில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதை கருத்தில் வைத்து, இந்த வீடியோவை வெளியிட, காங்., தலைமை திட்டமிட்டுள்ளது. 'பிரதமர் மோடி, திருக்குறள்
டில்லி உஷ், சோனியா, சோனியா காந்தி, காங்கிரஸ்,  உ.பி., பிரியங்கா, அதிமுக, அ.தி.மு.க.,

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாடு, அடுத்த மாதம் சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பிரியங்கா பங்கேற்று, சோனியா பேசிய, 'வீடியோ'வை வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்த வீடியோவில், சோனியா தமிழில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதை கருத்தில் வைத்து, இந்த வீடியோவை வெளியிட, காங்., தலைமை திட்டமிட்டுள்ளது. 'பிரதமர் மோடி, திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம், கலாசாரத்தை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். சோனியாவும், அதையே, 'காப்பி' அடிக்கிறார்' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.


தமிழருக்கு பதவி கிடைக்குமா?


லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. இதுவரை துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. வழக்கமாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் தான், துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார். ஆனால், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. லோக்சபாவில், கணிசமான எம்.பி.,க்களை வைத்துள்ள தி.மு.க.,வும், துணை சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கிறது. தி.மு.க.,வின் ஜி.லட்சுமணன், அ.தி.மு.க.,வின் தம்பிதுரை ஆகிய தமிழர்கள், ஏற்கனவே துணை சபாநாயகர்களாக பதவி வகித்துள்ளனர். தற்போதும், இந்த பதவி தமிழருக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


டில்லியில் அ.தி.மு.க., அலுவலகம்!


தலைநகர் டில்லியில் அரசியல் கட்சிகளுக்கு அலுவலகம் கட்டுவதற்கு, மத்திய அரசு இடம் வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு, இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மிகப் பெரிய அலுவலகத்தை அ.தி.மு.க., கட்டி முடித்துள்ளது. இதன் முழு வேலைகளையும் தம்பிதுரை முன்னின்று பார்த்தார். சமீபத்தில், டில்லி வந்த தமிழக முதல்வர் இ.பி.எஸ்., இந்த அலுவலகத்தை பார்த்தார். தான் முதல்வர் பதவியில் இருக்கும்போதே, இந்த அலுவலகத்தை திறக்க வேண்டும் என விரும்புகிறார், இ.பி.எஸ்., இதையடுத்து, இந்த அலுவலகம் விரைவில் திறக்கப்படவுள்ளது.


காலண்டர் பிரசாரம்!


உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. எப்படியாவது இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரியங்காவை இங்கு களமிறக்கி விட்டுள்ளது, காங்கிரஸ் மேலிடம். தேர்தல் பணிகளை பார்ப்பதற்காக,உ.பி.,யில் குடியேறப் போவதாக அறிவித்திருந்த பிரியங்கா, இப்போது அதில் ஆர்வம் காட்டுவது இல்லை. உ.பி.,யில் உள்ள கிராமங்களில், காங்., சார்பில், வீடு வீடாக காலண்டர் வழங்கப்படுகிறது.அதில் ஒவ்வொரு மாத தேதிக்கு மேல், பிரியங்காவின் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை, 10 லட்சம் காலண்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. 'மேடம் அடிக்கடி இங்கு வருவது இல்லை. அதனால் தான், காலண்டர் மூலமாக பிரியங்கா ஞாபகம், மக்களுக்கு வரட்டும் என்ற எண்ணத்தில், இதைச் செய்கிறோம்' என்கின்றனர், உ.பி., மாநில காங்கிரசார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
16-பிப்-202123:46:24 IST Report Abuse
sethusubramaniam பிரியங்கா மட்டுமில்லே , சோனியாவே மாநாடு போட்டாலும் பத்துலேருந்து , பதினஞ்சு சீட்டுக்கு மேலே காங்கிரசுக்கு கிடைக்காது. அதுலேயும் பாதிப்பேர் ஜெயிச்சாலே அதிகம். எதுக்கு வீண் செலவு.
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
08-பிப்-202114:28:35 IST Report Abuse
sethusubramaniam சோனியா தமிழில் பேசிய விடியோவை இங்கு வெளியிடப்போகிறார்களாம் . சென்ற வாரம் ' டில்லியில் ஆட்சியிலிருப்பவர்கள் தமிழில் பேசினால் இங்கு வெற்றி பெறமுடியும் என்று கனவு காண்கிறார்கள் ' என்று கூறினாரே , அது இதற்கும் பொருந்துமோ
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஜன-202113:51:09 IST Report Abuse
Sridhar அதுதான் உபில நடந்த இடைத்தேர்தல்கள் மிக தெள்ளத்தெளிவா காட்டிடுச்சே பிரியங்காவோ இல்ல மாகாபாவோ யாருக்கும் அங்கே ஒட்டு விழாதுன்னு அங்கே எல்லா ஓட்டும் மோடியோட யோகிக்கிக்கு தான்னு எப்போ அயோத்திய கோயில் கட்ட ஆரம்பிச்சாங்களோ அப்போவே உறுதியாயிடுச்சே. அப்புறம் எதுக்கு அவ்வளவு செலவழிச்சு காலண்டர் கிலண்டறெல்லாம்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X