பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் கண்டனம்

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், காங்., எம்.பி., ராகுல் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,375 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து, மே முதல்,
Congress,Rahul,Rahul Gandhi,diesel, காங்கிரஸ்,டீசல்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், காங்., எம்.பி., ராகுல் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,375 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து, மே முதல், மீண்டும் உயரத் துவங்கியது. இதன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்., ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்., எம்.பி., ராகுல் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஜி.டி.பி.,யில் பிரதமர் மோடி அதிக வளர்ச்சியை காட்டியுள்ளார். அதாவது ஜி.டி.பி., என்பது சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலையில் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டியுள்ளார். மக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மோடி அரசோ, வரி வசூலில் மும்முரமாக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜன-202110:42:58 IST Report Abuse
ஆரூர் ரங் உலகத்துக்கே பெட்ரோல் விற்கும் சவூதி துபாயில்கூட விலையேற்றியுள்ளார்களாம். பப்பு அங்கேயும் போய்ப் போராடலாம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202104:35:32 IST Report Abuse
J.V. Iyer சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்ததையும் சாடுகிறார் ராகுல்ஜி. எதுவும் உயரக்கூடாதாம். அவரின் பொதுஅறிவு உட்பட.
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
25-ஜன-202104:27:49 IST Report Abuse
Sundar He is not right. The loss of revenue and to compensate of relief to the business circle and the people during pandemic are to be compensated for source of income. Rising price in fuel is necessarily required as sharing by the fuel users. Action by Central government is justified.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X