அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பா.ஜ., பொறுப்பாளர் அதிரடி

Added : ஜன 25, 2021
Share
Advertisement
சிக்கமகளூரு; ''தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி நடத்தும்,'' என, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளருமான, சி.டி.ரவி, சிக்கமகளூரில் நேற்று கூறியதாவது:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா, குணமடைந்து வருகிறார். அவரது சிறை

சிக்கமகளூரு; ''தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி நடத்தும்,'' என, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளருமான, சி.டி.ரவி, சிக்கமகளூரில் நேற்று கூறியதாவது:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா, குணமடைந்து வருகிறார். அவரது சிறை தண்டனை முடிந்து, வரும், 27ல் விடுதலையாவார். அவர் குறித்து கூறுவதற்கு எதுவும் கிடையாது.அவரை புகழ்ந்தோ, ஆதரித்தோ பேசுவதற்கு எதுவும் இல்லை. சசிகலாவை, அ.தி.மு.க.,வினர் ஏற்றுக் கொள்வரா என்பதும் எனக்கு தெரியாது.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., எங்கள் கூட்டணியில் இணைந்தது. தமிழக சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும்.பா.ஜ.,வினர், அ.தி.மு.க.,வினரை நாடி செல்லவில்லை. அவர்கள் தான், எங்களை நாடி வந்துள்ளனர். இம்முறை சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., - அ.தி.மு.க., இணைந்தே ஆட்சி அமைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X