லக்னோ: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறப்புக்கு காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ., எம்.பி., சாக்சி மகாராஜ் குற்றம்சாட்டி உள்ளார்.
சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின், 125வது பிறந்த நாள் விழா கடந்த 23ம் தேதி கொண்டாடப்படது. 'பரக்ரம் திவாஸ்' எனும் வலிமை தினமாக கொண்டாடிய மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை வலிமை தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், உ.பி., மாநிலம் உன்னாவ் தொகுதி பா.ஜ., எம்.பி., சாக்சி மகாராஜ், நேதாஜி இறப்பு குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உ.பி.,யில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மகாத்மா காந்தியடிகளும், நேருவும், நேதாஜியின் புகழுக்கு முன் நிற்க முடியாது. நேதாஜி இறப்புக்கு காங்கிரஸ் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1945 ஆம் ஆண்டு ஆக., 18ல், தைபேயில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு, ஆர்டிஐ கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அதனை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE