புதுடில்லி:லடாக் எல்லைப் பகுதியில், குவிக்கப்பட்டுள்ள வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து, இந்திய - சீன அதிகாரிகளுக்கு இடையே, நேற்று, 11 மணி நேரம் பேச்சு நடந்தது.

நம் அண்டை நாடான சீனாவுடன், எல்லைப் பிரச்னை காரணமாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, இரு தரப்பு அதிகாரிகள், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான, ஒன்பதாம் கட்ட பேச்சு, நேற்று நடந்தது.

இதில், இந்தியா தரப்பில், மூத்த ராணுவ தளபதி மேனன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.சீன எல்லைப் பகுதியில் உள்ள மோல்டோ என்ற பகுதியில், காலை, 10:00 மணிக்கு துவங்கிய இந்த பேச்சு, இரவு, 9:00 மணி வரை நடந்தது. எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறவேண்டும் என, சீன அதிகாரிகளிடம், இந்திய அதிகாரிகள் வலியுறுத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE