புதுடில்லி: லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. இதுவரை துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. வழக்கமாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் தான், துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார்.

ஆனால், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. லோக்சபாவில், கணிசமான எம்.பி.,க்களை வைத்துள்ள தி.மு.க.,வும், துணை சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கிறது.

தி.மு.க.,வின் ஜி.லட்சுமணன், அ.தி.மு.க.,வின் தம்பிதுரை ஆகிய தமிழர்கள், ஏற்கனவே துணை சபாநாயகர்களாக பதவி வகித்துள்ளனர். தற்போதும், இந்த பதவி தமிழருக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE