இது உங்கள் இடம்: 'பிட்டு' போட்டு சீட்டு பிடிக்கிறார்!

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: -முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'ராகுல் வரும்போது கூடும் கூட்டத்தைப் பார்த்து தான், காங்., கூடுதல் தொகுதியைக் கேட்டுப் பெற முடியும். ஆல மரம் போன்ற காங்கிரசின் வேரை உறுதிப்படுத்த, நம் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய தருணம் இது. 'காங்கிரசில்,
rahul, alagiri, speech, congress, ராகுல், அழகிரி, பேச்சு, காங்., நகைச்சுவை


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: -முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'ராகுல் வரும்போது கூடும் கூட்டத்தைப் பார்த்து தான், காங்., கூடுதல் தொகுதியைக் கேட்டுப் பெற முடியும். ஆல மரம் போன்ற காங்கிரசின் வேரை உறுதிப்படுத்த, நம் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய தருணம் இது. 'காங்கிரசில், ஈ.வெ.ரா., இருந்தது தான் பெருமை. அவரை கொள்கை ரீதியாக, குடும்ப ரீதியாக உரிமை கொண்டாட, நமக்கு மட்டுமே உரிமை உள்ளது' என, தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி கூறியுள்ளார்.

இதை அவர் சிரிக்காமல் பேசினாரா என்பது தெரியாது; ஆனால், இதை யாரும் சிரிக்காமல் படிக்க முடியாது என்பது தான் உண்மை.தீராத விளையாட்டு பிள்ளையான ராகுல், சில மாதங்களுக்கு முன் எங்கு சென்றார் என்றே தெரியாத அளவில், சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவர், தற்போது இந்தியா திரும்பியுள்ளார்.அவருக்காக, தமிழகத்தில் பெரிய கூட்டம் கூடும் என, கனவு காண்கிறார். பணம் கொடுத்தால் கூடும்; தானாக சேராது.தி.மு.க.,விடம் தொகுதி பிச்சை கேட்கும் நிலையில் உள்ள காங்கிரஸ், வெறும் பெருங்காய டப்பா. பழங்கதை பேசி, பெருமைபடலாம்; அவ்வளவு தான்... இதில், ஜம்பம் என்ன வேண்டிக் கிடக்கிறது?காங்கிரசை, ஆல மரம் என்று கூறுவது, உண்மை தான். ஆனால், அந்த பழமையான ஆல மரம் உளுத்துப்போய், வேரெல்லாம் செல்லரித்து, தாங்கிப் பிடிக்க முட்டுக்கட்டை இல்லாமல், தனித்து நிற்க கூட திராணியற்று இருப்பது கண்கூடு.

ஜவஹர்லால் நேரு, காமராஜர் போன்ற தலைவர்கள் நீரூற்றி பராமரித்த காங்கிரஸ் எனும் ஆல மரம், இந்திரா காலத்திற்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக பட்டுபோகத் துவங்கியது.ராஜிவ் படுகொலைக்குப் பின், அனுதாப அலை மூலம் வேரூன்றியது; ஆனால், சோனியா கைக்கு போனபின், 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ், சரிவை நோக்கிச் செல்லத் துவங்கியது.ஆகாய ஹெலிகாப்டர் முதல், பாதாள நிலக்கரி வரை ஊழல் ஊழல்!தமிழகத்தில், காங்கிரஸ் செல்வாக்கு இழக்க காரணம், கோஷ்டிச் சண்டை. அதைத் தான், அழகிரி தொட்டு காண்பிக்கிறார். ஒற்றுமையாய் இருந்தால் தான் சாதிக்க முடியும் என, மறைமுகமாகக் கூறுகிறார். அதெல்லாம் நடக்குற காரியமா?


latest tamil news


அடுத்து, அழகிரி சொன்னது தான், நகைச்சுவையின் உச்சம். அதாவது, ஈ.வெ.ரா., காங்கிரசில் இருந்தாராம். அதனால் அவரது திராவிடக் கொள்கைக்கு, காங்கிரஸ் மட்டும் தான் உரிமை கொண்டாட வேண்டுமாம்.அட பாவமே... காங்கிரசை அழித்ததே, ஈ.வெ.ரா., வளர்த்த திராவிட கழகம் தான். இது ஊரறிந்த உண்மை. எதை தின்னா பித்தம் தெளியும் என்ற நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது என்பது, அழகிரியின் பேச்சிலிருந்து புரிகிறது. வெறும் உளறல் தான்.இவருக்கும், ஸ்டாலினுக்கும் ஒரே வித்தியாசம். அவர் சீட்டு பிடிக்க, 'பிட்' டோடு அலைகிறார். இவர் பிட்டு போட்டு, சீட்டு பிடிக்க பார்க்கிறார். அம்புட்டு தான்!

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-202119:53:19 IST Report Abuse
Rajasekar திமுக கட்சி காரங்க வந்தாங்காலா .....
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
25-ஜன-202119:12:08 IST Report Abuse
Rameeparithi சீனாவின் ஏஜென்ட் ராகுல் கான் திருப்பூரையும் / கோவையையும் தொழில் வளர்ச்சி அடைவதை நோட்டமிடத்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது வெளிநாட்டு பயணம் முடித்த கையோடு நேர தமிழகம் வந்ததின் நோக்கம் புரிந்தால் சரி மக்களே , ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
Saravanan -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜன-202117:14:39 IST Report Abuse
Saravanan தி மு க மற்றும் காங்கிரஸ்கு எதிரான கருத்துக்களையே பதிவு செய்கிறது. ஆளுங்கட்சிக்கு மேல் உள்ள பயமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X