ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம்

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
காத்மாண்டு: நேபாளத்தில், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, பிரதமர் ஒலி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு முதல், பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக, சொந்த கட்சியினரே போர்க்கொடி துாக்கி வருகின்றனர். இதற்கிடையே, பார்லிமென்டை முன்கூட்டியே கலைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு, பிரதமர் ஒலி

காத்மாண்டு: நேபாளத்தில், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, பிரதமர் ஒலி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.latest tamil news


நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு முதல், பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக, சொந்த கட்சியினரே போர்க்கொடி துாக்கி வருகின்றனர். இதற்கிடையே, பார்லிமென்டை முன்கூட்டியே கலைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு, பிரதமர் ஒலி பரிந்துரைத்தார். இதையடுத்து, பார்லி.,யை கலைத்து, அதிபர் உத்தரவிட்டார்.இது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சியின் துணைத் தலைவரான பிரசந்தா, பிரதமர் ஒலியை கடுமையாக சாடினார்.


latest tamil news


இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து, ஒலி நீக்கப்பட்டு, அந்த பதவியில், மாதவ் குமார் நியமிக்கப்பட்டார். பார்லி., குழுத் தலைவராக பிரசந்தா நியமிக்கப்பட்டார்.பின், பார்லி.,யை கலைத்தது குறித்து, பிரதமர் ஒலியிடம், கட்சித் தலைமை விளக்கம் கோரி இருந்தது. எனினும், அதற்கு அவர் தரப்பில் விளக்கம் தரப்படவில்லை
இந்நிலையில், பிரதமர் ஒலி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். நேற்று நடந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-ஜன-202118:16:06 IST Report Abuse
மலரின் மகள் சரியான நடவடிக்கை. தேசம் தப்பிக்கும் சீனாவின் குள்ளநரித்தனத்திலிருந்து. லஞ்சம் கோடானு கோடிகளாய் அள்ளி தருகிறது சீனா. குறிப்பிட்ட சிலரை உயர்பதவியில் இருப்போரை மடக்கி காரியம் சாதிக்கிறது. டிப்ளமேடிக் ஆக மக்கள் மனதில் இந்திய நல்லெண்ணம் பெற்று நம் நலனுக்கு எதிராக செயல்படுவோரை ராஜ தந்திர நடவடிக்கையில் தூக்கி எரிகிறது இந்தியா. அதே நேரம் ஆரோக்கிய டிப்ளமசி பயன்படுத்து நேச நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் அனைவருக்குமே கூட மருத்துவம் மூலம் மனித வாழ்விற்கு உத்திரவாதம் தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. பிரேசில், இலங்கை, மியான்மர், பூடான், நேபால், இந்தோனேசிய பங்களாதேஷ் மாலத்தீவு போன்ற தேசங்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கி இருக்கிறது சில லட்சஹ் முதல் சில மில்லியன் டோஸ்கல். சீன எங்கே முன்வந்து உதவியது. அவர்களின் தடுப்பூசி கூட வேற்று வார்த்தைகள் தான். உலகின் அனைத்து தேசத்தினரும் குறிப்பிட்ட சில எதிரி தேசத்தை தவிர நம்மை பாராட்டுகிறார்கள். வாழ்த்துவோம் நாம். நமது நடுவணரசை.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
25-ஜன-202114:00:16 IST Report Abuse
Sivagiri அப்பிடியே கட்சியின் பெயரையும் நேபாள ஜனதா என்று மாற்றலாம் . ..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜன-202113:25:15 IST Report Abuse
sankaseshan உலகில் இன்னும் ஓரிரண்டு நாடுகளில் கம்முனிசம் ஒட்டிக்கிக் கொண்டிருக்கிறது ரசிஸ்யாவில் எதிர்பு வலுக்கிறது சீனாவிலும் அதே கதைதான் கியூபாவி வடகொரியாவு ம் மாறவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X