லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. எப்படியாவது இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரியங்காவை இங்கு களமிறக்கி விட்டுள்ளது, காங்கிரஸ் மேலிடம். தேர்தல் பணிகளை பார்ப்பதற்காக,உ.பி.,யில் குடியேறப் போவதாக அறிவித்திருந்த பிரியங்கா, இப்போது அதில் ஆர்வம் காட்டுவது இல்லை.
உ.பி.,யில் உள்ள கிராமங்களில், காங்., சார்பில், வீடு வீடாக காலண்டர் வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு மாத தேதிக்கு மேல், பிரியங்காவின் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை, 10 லட்சம் காலண்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. 'மேடம் அடிக்கடி இங்கு வருவது இல்லை. அதனால் தான், காலண்டர் மூலமாக பிரியங்கா ஞாபகம், மக்களுக்கு வரட்டும் என்ற எண்ணத்தில், இதைச் செய்கிறோம்' என்கின்றனர், உ.பி., மாநில காங்கிரசார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE