அரசியல் செய்தி

தமிழ்நாடு

துரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு?

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
காட்பாடி: 'உடல் நலத்தை கருத்தில் கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடாமல், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்' என, வேலுார் மாவட்ட தி.மு.க.,வினர் கடிதம் வாயிலாக, கட்சி மேலிடத்திற்கு வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: துரைமுருகனுக்கு, ௮௩ வயதாகி விட்டது. அவரது மகன்

காட்பாடி: 'உடல் நலத்தை கருத்தில் கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடாமல், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்' என, வேலுார் மாவட்ட தி.மு.க.,வினர் கடிதம் வாயிலாக, கட்சி மேலிடத்திற்கு வலியுறுத்தி உள்ளனர்.



latest tamil news



இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: துரைமுருகனுக்கு, ௮௩ வயதாகி விட்டது. அவரது மகன் கதிர்ஆனந்த் வேலுார் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக, அடிக்கடி துரைமுருகன் மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி, பரிசோதனை செய்து வருகிறார். அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, வீட்டில் ஓய்வு பெற்று, கட்சிக்கு ஆலோசனைகளை வழங்கி வரலாம். தேர்தலில் போட்டியிட்டால், அவர் பிரசாரத்திற்கு செல்வது கஷ்டமாக இருக்கும்.


latest tamil news



எனவே, இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், தேர்தலில் போட்டியிடாமல் துரைமுருகன், கட்சி பணிகளை மட்டும் ஈடுபட வேண்டும். அது தான் அவரது உடல் நலத்திற்கு உகந்தது. இது தொடர்பாக, வேலுார் மாவட்ட நிர்வாகிகள், கட்சி மேலிடத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayyo paavam naan - chennai,இந்தியா
26-ஜன-202109:33:01 IST Report Abuse
ayyo paavam naan எண்பத்தி மூன்று வயசு அதிகம் என்றால், தொண்ணூற்று மூன்று வயது குறைந்ததா? அவரை தலைவர் பதவிக்கு கொண்டுவந்ததே குடும்பத்திற்கு பிடிக்கவில்லை போல இருக்கிறது. அவரை ஓரங்கட்ட, எடுக்கப்படும் முயற்சியே
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
25-ஜன-202120:04:23 IST Report Abuse
spr இவரென்னவோ வாக்காளர்களுக்கு கொடுக்க கவர்லே இரண்டாயிரம் ருபாய் போட்டு வைத்திருந்தார் என்றெல்லாம் பரபரப்பா செய்தி வந்தே என்ன ஆச்சு?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
25-ஜன-202119:23:54 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஒரு SC, or ST candidate தான் திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்ல திமுகவில் யாருக்கேனும் தைரியம் இருக்கிறதா? அடலீஸ்ட் திமுக தலைமை பொறுப்பையாவது கொடுக்கத்தான் முடியுமா? இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட திமுக தலைவர்கள் கடைசி வரை அடிமைக்கு அடிமையாகவே இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X