உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா
UK, ExtendsLockdown, July17, CovidLockdown, QuarantineVisitors, BorisJohnson, பிரிட்டன், இங்கிலாந்து, கொரோனா, ஊரடங்கு, பொதுமுடக்கம், நீட்டிப்பு, தனிமைப்படுத்தல், போரிஸ் ஜான்சன்

லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று அதிதீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து திக்குமுக்காடியது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பல நாடுகளும் அறிவித்தன. அதற்குள் சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவியது.


latest tamil newsஇந்நிலையில் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனவும் கூறினார்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இதுவரை 97,939 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - Tiruchchirappalli,யுனைடெட் கிங்டம்
25-ஜன-202122:55:05 IST Report Abuse
suresh We live in UK.We are in lock down. But the Prime Minister has not yet extended till July. So not sure whether this news is 100% correct. Please check.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
25-ஜன-202116:35:02 IST Report Abuse
ram இங்கு இருக்கும் சில அறிவாளிகள் இவர்களுக்கு போட்டாச்சா, அவர்களுக்கு போட்டாச்சா என்று கேள்வி எழுப்பிகிறார்கள், அயல் நாடுகளில் இருந்து ஆர்டர்கள்கள் குவிகிறது என்பது இவர்களுக்கு தெரியுமா. இங்கு ஓசியில் போடாமல் பத்து மடங்கு விலை வைத்தால் ஓடி வந்து போட்டு கொள்வார்கள்.
Rate this:
Cancel
suresh - Tiruchchirappalli,யுனைடெட் கிங்டம்
25-ஜன-202115:37:25 IST Report Abuse
suresh இங்கிலாந்தில் உள்ள எங்களுக்கே இந்த விடயம் தெரியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X