அரசியல் செய்தி

தமிழ்நாடு

"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் கூறுகிறீர்கள். கூட்டணி தலைவர்கள் கூட கூற மாட்டேன் என்கிறார்களே..."

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
வரும் சட்டசபை தேர்தல், தி.மு.க.,வின் வெற்றிக்கான தேர்தல் மட்டுமல்ல. கொள்கை ரீதியாக எதிர்ப்புகளை வெல்லும் தேர்தல்; தமிழகத்தை மீட்கும் தேர்தல்.-கனிமொழி'தி.மு.க., வெல்லும் என நீங்களும், ஸ்டாலினும், உதயநிதியும் தான் கூறுகிறீர்கள்; கூட்டணி தலைவர்கள் கூட, கூற மாட்டேன் என்கிறீர்களே...' என, போட்டுக்கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு
கனிமொழி,  ஜோதிமணி, திமுக, காங்கிரஸ், ராகுல், இளங்கோவன், இல.கணேசன்

வரும் சட்டசபை தேர்தல், தி.மு.க.,வின் வெற்றிக்கான தேர்தல் மட்டுமல்ல. கொள்கை ரீதியாக எதிர்ப்புகளை வெல்லும் தேர்தல்; தமிழகத்தை மீட்கும் தேர்தல்.-கனிமொழி


'தி.மு.க., வெல்லும் என நீங்களும், ஸ்டாலினும், உதயநிதியும் தான் கூறுகிறீர்கள்; கூட்டணி தலைவர்கள் கூட, கூற மாட்டேன் என்கிறீர்களே...' என, போட்டுக்கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு



புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக, தி.மு.க., அறிவித்து உள்ளது என்பது, காங்கிரஸ் கூட்டணியை, தி.மு.க., முறிப்பதற்கான முன்னோட்டம். காங்கிரஸ் கூட்டணியை, தி.மு.க., முறித்துக் கொண்டால், அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லது.-இல.கணேசன்


latest tamil news




'மொத்தத்தில், பா.ஜ.,வுக்கு ரொம்ப நல்லது என சொல்லுங்கள்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி


கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், காங்., முன்னாள் தலைவர் ராகுல், தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ராகுல் நமக்கு தலைமை ஏற்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ராகுல் வருகை, தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.-இளங்கோவன்


'ராகுல் வருகையால், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம், மாநில தலைவர் அழகிரி மாற்றமா... அதற்குத் தான் வாய்ப்பு உள்ளது. ஒரு ஓட்டு கூட, ராகுல் வருகையால், காங்கிரசுக்கு கூடுதலாக கிடைக்காது...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி



புதுவையில், தி.மு.க., தனித்து போட்டியிடுமா என்பது குறித்து, அந்த மாநிலங்களின் நிலைப்பாடு. தமிழகத்தில், தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியாக உள்ளது. நிச்சயம் இந்த கூட்டணி, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். 'ஜோதிமணி


'தமிழகத்திலும், காங்.,கை கழற்றி விட, தி.மு.க., தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், நீங்கள், கூட்டணி வலுவாக இருக்கிறது என்கிறீர்களே...' என, எடுத்துக் கொடுக்கத் தோன்றும் வகையில், கரூர், காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டை முன்னர் தெரிவித்தது. அப்படியானால் அக்கட்சி, தி.மு.க.,வுடன் இன்று வைத்துள்ள கூட்டணி, கொள்கை கூட்டணியா?-ராமலிங்கம்


தி.மு.க.,வில் நீங்கள் நீண்ட காலம் இருந்த போது, இந்த கேள்வியை எழுப்பி இருக்கலாமே...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், பா.ஜ., பிரமுகருமான, ராமலிங்கம் அறிக்கை



கொரோனா தடுப்பூசியை, அனைத்து மாநிலங்களிலும் இலவசமாக போட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு, போதுமான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டசபை தேர்தலை, ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.-ராமகிருஷ்ணன்


'போராட்ட களங்களில், 'வேண்டும், வேண்டும்' என குரல் கொடுத்து, பேட்டியிலும் அப்படியே, 'வேண்டும், வேண்டும்' என்கிறீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
25-ஜன-202120:20:13 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் மின்சாரவாரிய லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிவாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -மதுரை திருமங்கலம் மின்சாரவாரியத்தின் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை , லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது , பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் திருமங்கலம் மின்சாரவாரியத்தின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் மின்சாரவாரியத்தின் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை திருமங்கலம் தமிழ் நாடு மின்சாரவாரியத்திற்
Rate this:
Cancel
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
25-ஜன-202119:15:21 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் கூட்டணி தலைவர்கள் - நாங்க சொன்னா சிரிச்சுடுவாங்கப்பா
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) கனி ஆன்டி சொல்லுறாங்க கொள்கைக்கான தேர்தலாம் கொள்ளைக்கான தேர்தல்னு தெளிவா சொல்லுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X