பொது செய்தி

இந்தியா

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 வீரர்கள் காயம்

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சிக்கிம்: சிக்கம் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில், 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவுடன், எல்லைப் பிரச்னை காரணமாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில், சீன ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க,
India, China, Sikkim, இந்தியா, சீனா, ஊடுருவல், முறியடிப்பு, சிக்கிம்,

சிக்கிம்: சிக்கம் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில், 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவுடன், எல்லைப் பிரச்னை காரணமாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில், சீன ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, எல்லையில் இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டது. இதற்கிடையே, எல்லை பிரச்னை தொடர்பான பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகள், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், இன்று சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீன வீரர்களின் முயற்சியை நமது இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். ஊடுருவ முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில், 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் தரப்பிலும் சிலர் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
26-ஜன-202106:30:24 IST Report Abuse
PalaniKuppuswamy நம்ம கிட்ட மரண அடி வாங்காம சீனாக்காரன் திருந்த மட்டன் போல உள்ளதே ....நிட்சயம் எது nadakum
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
26-ஜன-202106:29:58 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இங்க ஈரோட்டில் பப்பு விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சீன எல்லைக்கு அனுப்பலாம், இந்திய ராணுவமே தேவை இல்லை என்பது போல ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி இருப்பதாக வலை தளங்களிலும் ஊடகங்களிலும் வருகிறது. முதலில் பப்புவையும் காங்கிரஸ்காரர்களையும் அங்கு அனுப்பி ஒரு முப்பது நாள் அந்த பனிப்பிரதேசத்தில் நிற்க வைக்க வேண்டும், அப்போது தான் நம் ராணுவத்தின் கஷ்ட நஷ்டங்கள் அவருக்கு புரியும்
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
25-ஜன-202120:26:20 IST Report Abuse
Bharathi ஆனாலும் இங்க நெறைய சொரணை கெட்ட ஜனங்க தேச பற்று இல்லாம சீன பொருட்களை வாங்கிக்கிட்டுதான் இருக்காங்க. வெட்க கேடு.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-ஜன-202102:37:26 IST Report Abuse
தமிழவேல் ஒருநாளுக்கு 100 கோடி மாஸ்க் தேவைப்படும் நிலையில் இன்னும், இன்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம் சார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X