அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் விமர்சனம்

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
கரூர்: பிரதமர் மோடி, சீனா என்ற வார்த்தையைக்கூட சொல்லமுடியாதவராக, தைரியமற்றவராக இருக்கிறார் என காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் எம்பி.,யும், முன்னாள் தலைவருமான ராகுல், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 3வது நாளாக இன்று (ஜன.,25) கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் பேசியதாவது: அனைத்து இந்திய மக்களும்
Rahul, Congress, Modi, China, சீனா, மோடி, தைரியமற்றவர், ராகுல், காங்கிரஸ், கரூர், பிரசாரம்

கரூர்: பிரதமர் மோடி, சீனா என்ற வார்த்தையைக்கூட சொல்லமுடியாதவராக, தைரியமற்றவராக இருக்கிறார் என காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி.,யும், முன்னாள் தலைவருமான ராகுல், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 3வது நாளாக இன்று (ஜன.,25) கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் பேசியதாவது:
அனைத்து இந்திய மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் மோடி தனக்கு விரிந்த மார்பு இருப்பதாக கூறி பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் சீன ராணுவம் இன்று இந்திய எல்லைக்குள் அமர்ந்திருக்கிறது. 1000 கி.மீ இந்திய எல்லை சீன ராணுவத்தால் கைப்பற்றியுள்ளது


latest tamil newsபிரதமர் மோடி, சீனா என்ற வார்த்தையைக்கூட சொல்லமுடியாதவராக, தைரியமற்றவராக இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக சீனா என்ற வார்த்தையை அவர் எங்கும் உச்சரித்ததே கிடையாது. சீனா இந்தியாவில் நுழைந்தபோது அப்படியாரும் வரவில்லை என மோடி பொய் சொன்னார். சில நாட்களுக்கு பிறகு சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் இருப்பதை இந்திய ராணுவ அமைச்சரும், இந்திய ராணுவமும் ஒப்புக்கொண்டார்கள். மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியதாலும், மக்களை பிரித்தாழ்வதாலும்தான் சீன ராணுவத்திற்கு இந்தியாவிற்குள் நுழைவதற்கான தைரியம் வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil newsபின்னர், கரூர் பேருந்துநிலையம் பகுதியிலும் பிரசாரம் செய்தார். அதனை தொடர்ந்து, கரூர் வாங்கல் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
26-ஜன-202108:53:00 IST Report Abuse
Darmavan இவனை போல் சீனாவிடம் லஞ்சம் வாங்கவில்லை மோடி .இவன் கொள்ளு பாட்டனை போல் நாட்டை இழக்கவில்லை.அறிவிலியின் பேச்சு.
Rate this:
Cancel
Raman - Bengaluru,இந்தியா
26-ஜன-202108:17:59 IST Report Abuse
Raman Nonsense this family has entered into a dirty agreement with China to sell the nation. His great grandfather ly told that land is not required for India, now he and his mother silently entered into agreement with China against the interest of our country. It is out good time God has sent Modi to save our Nation from this corrupt and unethical family.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
25-ஜன-202122:26:36 IST Report Abuse
R. Vidya Sagar கூட்டத்தை பார்த்தால் அனுதாப அலைக்கு ஏற்பாடு மாதிரி தெரிகிறது. கவனம் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X