பொது செய்தி

இந்தியா

சீன வீரர்களை சிதறவிட்ட இந்திய வீரர்கள் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சிக்கிம் : எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. நம் அண்டை நாடான சீனா எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அவ்வப்போது சண்டையும் நடக்கிறது. மேலும் எல்லையில் சீன ராணுவத்தினர் அதிகளவில் குவித்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் அங்கு
IndianandChinese, 20Chinese, NakuLa

சிக்கிம் : எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

நம் அண்டை நாடான சீனா எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அவ்வப்போது சண்டையும் நடக்கிறது. மேலும் எல்லையில் சீன ராணுவத்தினர் அதிகளவில் குவித்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லை பிரச்னையை தீர்க்க இரு நாட்டு அதிகாரிகளும் பேசுகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் சில தினங்களுக்கு சிக்கிம் எல்லையில் நகு லா என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் அத்துமீறி ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் நடந்ததாக தெரிகிறது. இதில் சீனா தரப்பில் 20 வீரர்கள் காயமடைந்ததாகவும், இந்திய தரப்பில் 4 வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருநாட்டு வீரர்கள் மோதலில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் உலவுகிறது. ஆனால் அது இப்போது நிகழ்ந்ததா என உறுதியாக தெரியவில்லை.

இதனிடையே எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறிய சம்பவமும், இந்தியா பதிலடி கொடுத்த சம்பவமும் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த விஷயம் டுவிட்டரில் #Indian and Chinese, #20 Chinese, #Naku La ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின. பலரும் இந்திய வீரர்களின் செயலுக்கு பாராட்டும், அவர்களின் தைரியத்தை போற்றியும் புகழ்ந்து வருகின்றனர். சிலர், சீனா இதுபோன்று அடிக்கடி அத்துமீறுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். அதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் எல்லையில் சீனா வாலாட்டினால் உடன் பதிலடி கிடைக்கும், ஜெய்ஹிந்த் என கருத்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
26-ஜன-202108:44:50 IST Report Abuse
Darmavan பேச்சு வார்த்தை சீனாவிடம் எடுபடாது. அடி ஒன்றுதான் சரி.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
25-ஜன-202119:33:42 IST Report Abuse
sridhar Omnibus will have a different take on this.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
25-ஜன-202119:25:50 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நம் அண்டை நாடுகளின் தலைமை சரியில்லை. நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X