ஈரோடு : ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுலின் உளறல் பேச்சு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, கேலி, கிண்டலுக்கு உள்ளானது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல், ஐந்து நாள் பயணமாக தமிழகத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். தொழில்துறையினர், பொது மக்கள் என பல தரப்பட்ட மக்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஈரோட்டில் இவர் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் மிகவும் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.
அந்த வீடியோவில் ராகுல் பேசியது இது தான், ''சீனாவிடமிருந்து நம்மை காக்க, நாம் நமது ராணுவத்தை எல்லையில் பயன்படுத்தி வருகிறோம். நீங்கள் இந்திய பணியாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை பயன்படுத்தினால் எல்லையில் ராணுவ வீரர்களையோ, விமான மற்றும் கடற்படை வீரர்களையோ நிற்க வைக்க அவசியம் இருக்காது. இந்தியாவிற்குள் நுழைய சீனாவிற்கும் தைரியம் இருக்காது'' என்கிறார்.

நமது தொழிலாளர்கள், விவசாயிகளை பயன்படுத்துவதற்கும், எல்லையில் ராணுவ வீரர்கள் நாட்டை காப்பதற்கும் என்ன சம்பந்தமும். எதற்காக இவர் இப்படி உளறுகிறார் என சகட்டுமேனிக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர், ''என்ன ஒரு விளக்கம் ராகுல் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்'', ஆச்சர்யமாக உள்ளது, என்ன சொல்ல வருகிறார் அவர்'', ''என்ன இது அவருக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்படுகிறதா இல்லை போதையில் உளறுகிறாரா?'', ''நமக்கு தொழிலாளர்கள், விவசாயிகள் யாரும் தேவையில்லை, ராகுல் ஒருவரே போதும்'', ''சீன வீரர்கள் மத்தியில் இவரை பேச வைத்தால் போதும், அவர்களே ஓடி போய்விடுவார்கள்'', ''ராகுலை பொறுத்தமட்டில் அவருக்கும், அவரது மூளைக்கும் சமூக இடைவெளி நிறைய உள்ளது. அவர் தலைவராக இருக்கும் வரை பா.ஜ., தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்'' ''இந்த வீடியோவை சீனாக்காரர்கள் பார்த்தால் என்ன செய்வார்கள் என கற்பனை செய்து பார்க்கிறேன். அவர்களே யோசிப்பார்கள், அவர் என்ன பேசுகிறார் என்று'' இப்படி பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE