பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுக்கு நாட்டு மக்களின் நன்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :“உணவு பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கூறினார்.இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு 'டிவி' மற்றும் வானொலி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:நம் தேசிய விழாக்களை அனைத்து மக்களும் தேசப்பற்றுடன் கொண்டாடி
தடுப்பூசி மருந்து,  தர்சார்பு நிலை, எட்டியுள்ளோம், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், உரை

புதுடில்லி :“உணவு பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கூறினார்.இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு 'டிவி' மற்றும் வானொலி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:நம் தேசிய விழாக்களை அனைத்து மக்களும் தேசப்பற்றுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த குடியரசு தினத்தை தேசிய கொடி மீது மரியாதை வைத்து அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைத்து நாம் கொண்டாடி வருகிறோம்.அரசியலமைப்பு புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் உள்ளிட்ட நான்கும் நம் அனைவருக்கும் புனிதமானவை. அரசுகளுக்காக மட்டும் அவை வகுக்கப்படவில்லை; நாட்டு மக்கள் அனைவரும் இதை பின்பற்றவேண்டும்.


latest tamil news



இயற்கை பேரழிவுகள் கொரோனா வைரஸ் உள்ளிட்ட இதர சவால்களுக்கு மத்தியில் எந்த குறையும் இன்றி நம் விவசாயிகள் வேளாண் பொருட்களை நிலையாக உற்பத்தி செய்துள்ளனர்.உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தும் நம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்.புதிய சட்டங்கள் வாயிலாக தொழில் மற்றும் வேளாண் துறைகள் மேம்படுத்தப்படுகின்றன.


சீர்த்திருத்தங்கள்



செய்யப்படும் துவக்க காலத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்படலாம். எனினும் விவசாயிகளின் நலன் மீது மத்திய அரசு அக்கறை வைத்துள்ளது என்பதில் எந்த ஐயமும் வேண்டாம்.விவசாயிகளைப் போல் எல்லைப் பகுதியில் விழிப்புடன் பணியாற்றி நாட்டின் பாதுகாப்பை நம் பாதுகாப்புப் படையினர் உறுதிபடுத்துகின்றனர். நம் வீரர்களின் வீரத்தையும் தியாகங்களையும் நினைத்து ஒவ்வொரு குடிமகனும் பெருமைப் படுகின்றனர்.இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
26-ஜன-202111:03:11 IST Report Abuse
தமிழன் உங்கள் பேச்சு மோடியால் சரிபார்க்கப்பட்ட பின் தான் பேசுகிறீர்களா??
Rate this:
Cancel
26-ஜன-202101:43:20 IST Report Abuse
ஆப்பு இவரை வேணும்னா நன்றியை சொல்லிக்கட்டும். நாட்டு மக்களுக்கு விவசாயிகளுக்கு எப்பிடி நன்றி சொல்லணும்னு தெரியும். அவசர அவசரமாக வேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டு, மக்கள் நன்றி தெரிவிப்பதாக இவுரு சொல்றாரு.
Rate this:
26-ஜன-202107:40:45 IST Report Abuse
மனுநீதிஇவர் விவசாயிக்கு நன்றி கூறாமல் சாப்பிடவே மாட்டார். முதலில் விவசாயிகளுக்கு நன்றி கூறும் பொங்கல் விழாவை கொண்டாட பழகிக்கொள் ஆப்பு. அப்புறம் வா கருத்து எழுத......
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜன-202119:50:06 IST Report Abuse
தமிழவேல் பாராட்டுகின்றோம்... ஆனால், இப்பவும் மாஸ்க் சீனாலேருந்துதான் வருதா...🤔
Rate this:
26-ஜன-202107:41:42 IST Report Abuse
மனுநீதிஉன் மூளை தான் சீனாவில் இருந்து வந்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X