புதுடில்லி:டில்லியின் முக்கிய பகுதிகளிலிருந்து பிப்ரவரி 1-ல் பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்வோம் என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் டில்லி எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

நாளை விவசாயிகள் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்துகிறார்கள். இந்த நிலையில் பிப்ரவரி 1-ந்தேதி டில்லியின் பல்வேறு இடங்களில் இருந்து பார்லிமென்டை நோக்கி கால்நடையாக பேரணி செல்வோம் என கிராந்திகரி கிஷான் யூனியனின் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE