புதுடில்லி : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு, பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மறைந்த பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி பாடகி சித்ராவுக்கு பத்ம பூஷண் விருதும், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, இசை கலைஞர் பாம்பே ஜெய்ஸ்ரீ ஆகியோருக்கு, பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. ---குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசால், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு நேற்று இரவு அறிவித்தது. வரும் மார்ச் - அல்லது ஏப்ரலில் நடக்கும் விழாவில், இந்த விருதுகளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.இந்த ஆண்டு ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 10 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு விருது பெறுவோரில், 29 பெண்களும், 10 வெளிநாட்டவர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். தமிழகத்தைச் சேர்ந்த, 11 பேருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவருக்கும், விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் விபரம்
பத்ம விபூஷண்

வரிசை எண் -பெயர் -துறை- மாநிலம்/நாடு
1. ஷின்ஸோ அபே- பொது விவகாரம் -ஜப்பான்.
2. மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் -கலை- தமிழகம்
3. டாக்டர் பெல்லி மென்னப்பா- ஹெக்டே மருத்துவம் -கர்நாடகா
4 .மறைந்த நரிந்தர் சிங் கபானி -அறிவியல் மற்றும் பொறியியல் -அமெரிக்கா
5 .மவுலானா வகிதுதின் கான்- ஆன்மிகம் -டில்லி
6. பி.பி.லால் -தொல்பொருள்- டில்லி
7. சுதர்சன் சாஹூ -கலை- ஒடிசா
பத்மபூஷண்

8. கே.எஸ்.சித்ரா- கலை -கேரளா
9. மறைந்த தருண் கோகோய்- பொது விவகாரம் -அசாம்
10. சந்திரசேகர் கம்பாரா -இலக்கியம் -கர்நாடகா
11. சுமித்ரா மகாஜன் -பொது விவகாரம்- மத்திய பிரதேசம்
12. நிரிபேந்திரா மிஸ்ரா -சிவில் சர்வீஸ் -உத்தர பிரதேசம்
13. மறைந்த ராம்விலாஸ் பஸ்வான்- பொது விவகாரம் -பீஹார்
14. மறைந்த கேஷுபாய் படேல் -பொது விவகாரம் -குஜராத்
15. மறைந்த கல்பே சாதிக் -ஆன்மிகம்- உத்தர பிரதேசம்
16. ரஜினிகாந்த் தேவிதாஸ் ஷராப் -வர்த்தகம் மற்றும் தொ- மஹாராஷ்டிரா
17. தர்லோசன் சிங் -பொது விவகாரம் -ஹரியானா
பத்மஸ்ரீ






18.குல்பாம் அகமது- கலை -உத்தர பிரதேசம்
19. பி.அனிதா -விளையாட்டு- தமிழகம்
20. ராமசாமி அன்னவரப்பு -கலை -ஆந்திரா
21. சுப்பு ஆறுமுகம்- கலை -தமிழகம்
22. பிரகாஷ்ராவ் அசவாடி-இலக்கியம் மற்றும் கல்வி -ஆந்திரா
23. புரி பாய்- கலை -மத்திய பிரதேசம்
24. ராதே ஷியாம் பர்லே -கலை -சத்தீஸ்கர்
25. தர்ம நாராயண் பர்மா -இலக்கியம் மற்றும் கல்வி -மேற்கு வங்கம்
26. லக்கிமி பரூவா -சமூகப்பணி -அசாம்
27. பிரேன் குமார் பசக் -கலை- மேற்கு வங்கம்
28. ரஜினி பெக்டார் -வர்த்தகம் -பஞ்சாப்
29. பீட்டர் புரூக் -கலை- பிரிட்டன்
30. சங்குமி புவால்சுவாக்- சமூகப்பணி -மிசோரம்
31. கோபிராம் பார்கைன் புராபகத்- கலை -அசாம்
32. பிஜாயா சக்கரவர்த்தி -பொது விவகாரம் -அசாம்
33. சுஜித் சத்தோபாத்யாய் -இலக்கியம் மற்றும் கல்வி -மேற்கு வங்கம்
34. மறைந்த ஜெகதிஷ் சவுத்ரி- சமூகப்பணி -உத்தர பிரதேசம்
35. சுல்த்ரிம் சான்ஜோர் -சமூகப்பணி- லடாக்
36. மவுமா தாஸ் -விளையாட்டு -மேற்கு வங்கம்
37. ஸ்ரீகாந்த் தத்தார் -இலக்கியம் மற்றும் கல்வி- அமெரிக்கா
38. நாராயண் தேப்நாத் -கலை -மேற்கு வங்கம்
39. சுத்னி தேவி -சமூகப்பணி- ஜார்கண்ட்
40. துலாரி தேவி -கலை- பீஹார்
41. ராதே தேவி -கலை -மணிப்பூர்
42. சாந்திதேவி -சமூக சேவை- ஒடிசா
43. வயான் திபியா -கலை -இந்தோனேஷியா
44. ததுதான் காதவி -இலக்கியம் மற்றும் கல்வி -குஜராத்
45. பரசுராம் ஆத்மாராம் கங்காவானே- கலை -மஹாராஷ்டிரா .
46. ஜெய் பகவான் கோயல் -இலக்கியம் மற்றும் கல்வி- ஹரியானா
47. ஜகதிஷ் சந்திர ஹால்தர் -இலக்கியம் மற்றும் கல்வி -மேற்கு வங்கம்
48 .மங்கல் சிங் ஹஜோவரி -இலக்கியம் மற்றும் கல்வி- அசாம்
49. அன்ஷு ஜாம்சென்பா -விளையாட்டு- அருணாச்சல பிரதேசம்
50. பூர்ணமசி ஜனி -கலை -ஒடிசா
51. மஞ்சம்மா ஜோகாட்டி- கலை -கர்நாடகா
52. தாமோதரன் கைதப்ரம் -கலை -கேரளா
53. நாம்தேவ் காம்ப்லே -இலக்கியம் மற்றும் கல்வி- மஹாராஷ்டிரா
54. மறைந்த மஹேஷ்பாய் மற்றும் நரேஷ்பாய் கனோடியா (இருவருக்கு)- கலை- குஜராத்
55. ராஜத் குமார் கர் -இலக்கியம் மற்றும் கல்வி- ஒடிசா
56. ரங்கசாமி லஷ்மிநாராயண காஷ்யப் -இலக்கியம் மற்றும் கல்வி -கர்நாடகா
57. பிரகாஷ் கவுர் -சமூக சேவை -பஞ்சாப் .
58. நிகோலஸ் கஜானாஸ் -இலக்கியம் மற்றும் கல்வி -கிரீஸ்
59. கேசவசாமி -கலை -புதுச்சேரி
60. குலாம் ரசூல் கான்- கலை- ஜம்மு - காஷ்மீர்
61. லக்கா கான் -கலை -ராஜஸ்தான்
62. சஞ்சிதா காட்டுன்- கலை- வங்கதேசம்
63. விநாயக் விஷ்ணு கேதேகர் -கலை- கோவா
64. நிரு குமார்- சமூக சேவை -டில்லி
65. லஜ்வந்தி -கலை- பஞ்சாப்
66. ரத்தன் லால் -அறிவியல் மற்றும் பொறியியல் -அமெரிக்கா
67. அலி மனிக்பான்- கண்டுபிடிப்பு -லட்சத்தீவுகள்
68. ராமசந்திர மாஞ்சி- கலை -பீஹார்
69. துலால் மான்கி- கலை- அசாம்
70. நானாதுரோ மாரக் -விவசாயம்- மேகாலயா
71. ரீபென் மாஷன்குவா- கலை- மணிப்பூர்
72. சந்திரகாந்த் மேத்தா- இலக்கியம் மற்றும் கல்வி -குஜராத்
73. ரத்தன் லால் மித்தல் -மருத்துவம் -பஞ்சாப்.
74. மாதவன் நம்பியார் -விளையாட்டு- கேரளா
75. ஷியாம் சுந்தர் பலிவால்- சமூக சேவை -ராஜஸ்தான்
76. சந்திரகாந்த் சம்பாஜி பாண்டவ்- மருத்துவம் -டில்லி
77. மறைந்த பாண்டே -மருத்துவம்- டில்லி
78. சாலமன் பாப்பையா- இலக்கியம் மற்றும் கல்வி- தமிழகம்
79 .பாப்பம்மாள் -விவசாயம்- தமிழகம்
80. கிருஷ்ண மோகன் பாத்தி- மருத்துவம்- ஒடிசா
81. ஜஸ்வந்திபென் ஜம்நதாஸ் போபத் -வர்த்தகம் மற்றும் தொழில்- மஹாராஷ்டிரா
82. கிரிஷ் பிரபுனே -சமூக சேவை -மஹாராஷ்டிரா
83. நந்தா ப்ரஸ்டி -இலக்கியம் மற்றும் கல்வி- ஒடிசா
84 .ராமசந்திர புலவர் -கலை -கேரளா
85. பாலன் புத்தேரி -இலக்கியம் மற்றும் கல்வி -கேரளா
86. பிருபாலா ராபா- சமூக சேவை -அசாம்
87. கணக ராஜூ -கலை -தெலுங்கானா.
88. பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்- கலை- தமிழகம்
89. சத்யராம் ரியாங்- கலை- திரிபுரா
90. தனஞ்ஜெய் திவாகர் சாக்தேவ் -மருத்துவம்- கேரளா
91. அசோக் குமார் சாஹூ- மருத்துவம்- உத்தர பிரதேசம்
92. பூபேந்திர குமார் சிங் சஞ்ஜெய்- மருத்துவம்- உத்தரகண்ட்
93. சிந்துதாய் சாப்கல் சமூக சேவை மஹாராஷ்டிரா
94. சாமன் லால் சாப்ரு (மறைவு) -இலக்கியம் மற்றும் கல்வி -ஜம்மு - காஷ்மீர்
95. ரோமன் சர்மா -இலக்கியம் மற்றும் கல்வி- அசாம்
96. இம்ரான் ஷா -இலக்கியம் மற்றும் கல்வி -அசாம்
97. பிரேம் சந்த் சர்மா- விவசாயம் -உத்தரகண்ட் .
98. அர்ஜுன் சிங் ஷெகாவத் -இலக்கியம், கலை- ராஜஸ்தான்
99. ராம் யாத்னா சுக்லா -இலக்கியம், கலை -உத்தர பிரதேசம்
100. ஜிதேந்திர சிங் ஷன்டி- சமூக சேவை -டில்லி
101. கர்தார் பராஸ் ராம் -சிங் கலை -ஹிமாச்சலப் பிரதேசம்
102. கர்தார் சிங் -கலை- பஞ்சாப்
103. டாக்டர் திலீப் குமார் சிங்- மருத்துவம் -பீஹார்
104. சந்திரசேகர் சிங் மற்றவை - விவசாயம்- உத்தர பிரதேசம்
105. சுதா ஹரி நாராயண் சிங் -விளையாட்டு -உத்தர பிரதேசம்
106. வீரேந்தர் சிங் -விளையாட்டு -ஹரியானா
107. மறைந்த மிருதுளா சின்ஹா -இலக்கியம், கலை பீஹார்
108. மறைந்த கே.சி. சிவசங்கர்- கலை -தமிழகம்
109.குரு மா கமாலி சோரன் -சமூக சேவை -மேற்கு வங்கம்
110. மராச்சி சுப்பிரமணியன்-சமூக சேவை- தமிழகம்
111. மறைந்த பி. சுப்பிரமணியன் -தொழில், வர்த்தகம் -தமிழகம்
112. நிடுமோலு சுமி -கலை- ஆந்திரா
113. கபில் திவாரி - இலக்கியம், கலை- ம.பி.,
114.மறைந்த வேல்ஸ்- இலக்கியம், கலை- ஸ்பெயின்
115. மறைந்த டாக்டர் திரு வேகங்கடம் வீர ராகவன்- மருத்துவம்- தமிழகம்
116. ஸ்ரீதர் வேம்பு- தொழில், வர்த்தகம்- தமிழகம்
117.கே.ஒய். வெங்கடேஷ்-விளையாட்டு- கர்நாடகா
118. உஷா யாதவ்- இலக்கியம், கல்வி - உத்தர பிரதேசம்
119. கர்னல் குவாசி சஜ்ஜத் அலி ஜாஹிர்- பொது விவகாரம் -வங்கதேசம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE