டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல்

Updated : ஜன 25, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன் :அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீதான விசாரணை, விரைவில் நடக்க உள்ள நிலையில், பல, எம்.பி.,க்களுக்கு மிரட்டல்கள் வருவது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக ஜோ பைடன், சமீபத்தில் பதவியேற்றார். முன்னதாக, அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லியின் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம்
டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல்

வாஷிங்டன் :அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீதான விசாரணை, விரைவில் நடக்க உள்ள நிலையில், பல, எம்.பி.,க்களுக்கு மிரட்டல்கள் வருவது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன், சமீபத்தில் பதவியேற்றார். முன்னதாக, அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லியின் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது.
அதிபராக இருந்த, டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.latest tamil news


வன்முறையைத் துாண்டியதாக, டிரம்ப் மீது, கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதிநிதிகள் சபையில் அது நிறைவேறியது. செனட் சபையில், வரும், பிப்., 8 ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பல, எம்.பி.,க்குக்கு மிரட்டல்கள் வருகின்றன. கொலை செய்யப் போவதாகவும், பார்லிமென்ட் வளாகத்தில் தாக்கப் போவதாகவும், பலருக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. சமூக வலை தளங்களில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பார்லி வளாகத்தில் மற்றொரு வன்முறை சம்பவம் நடப்பதை தடுக்க, தேவையான ஏற்பாடுகளில், பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தோர்
* அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தோரும் பணியாற்ற அனுமதிக்கும் புதிய உத்தரவை, அதிபர் ஜோ பைடன் பிறப்பிக்க உள்ளார்
* கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு சலுகைகளை அறிவிப்பது குறித்து, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி, எம்.பி.,க்களுடன், அதிபர் அலுவலக அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்
* மின்துறையின் முக்கிய பதவிகளுக்கு, இந்தியாவை பூர்வீகமாக உடைய நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பணியாளர் பிரிவு தலைவராக தாரக் ஷா; அறிவியல் பிரிவின் பணியாளர் தலைவராக தான்யா தாஸ்; சட்ட ஆலோசகராக, நாராயண் சுப்பிரமணியன்; பெட்ரோலியப் பிரிவு பணியாளர் தலைவராக சுசி தலாட்டி நியமிக்கப்பட்டுள்ளனர்
* சர்வதேச நிதி வளர்ச்சி வாரியத்தின் தற்காலிக தலைவராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, தேவ் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
26-ஜன-202119:45:09 IST Report Abuse
Raj டிரம்ப் ஒரு கொடுக்கோலன்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜன-202119:12:36 IST Report Abuse
madhavan rajanபஹ்ரைனுக்கு வந்து நெல்லை ராஜ் அவர்களை கொடுமைப்படுத்தி இருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் ஒரு கொடுங்கோலன்தான். என்ன கொடுமை அனுபவிச்ச என்பதை சொல்லப்பா?...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜன-202123:53:47 IST Report Abuse
தமிழவேல் தீவிர வாதிகள்...
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-202123:52:05 IST Report Abuse
Ramesh R gay sex will be normal from now on ..........hail america
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஜன-202106:24:26 IST Report Abuse
 Muruga Velஅபுதாபியில் அடக்கி வாசியுங்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X