மூடநம்பிக்கையால் மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 25, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
திருப்பதி: ஆந்திராவில், மூட நம்பிக்கை காரணமாக, நன்கு படித்த பெற்றோரே, தங்களின் இரு மகள்களை நரபலி கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. மகள்கள் மீண்டும் உயிர்த்தெழுவர் என்ற நம்பிக்கையில், அவர்களை கொலை செய்ததாக, அந்த முட்டாள் பெற்றோர், வாக்குமூலம் அளித்துள்ளனர்.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மதனபள்ளியில் உள்ள சிவா நகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். இவரது மனைவி
மூடநம்பிக்கை, மூடர்கள், பெற்றோர்,  மகள்கள், நரபலி

திருப்பதி: ஆந்திராவில், மூட நம்பிக்கை காரணமாக, நன்கு படித்த பெற்றோரே, தங்களின் இரு மகள்களை நரபலி கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. மகள்கள் மீண்டும் உயிர்த்தெழுவர் என்ற நம்பிக்கையில், அவர்களை கொலை செய்ததாக, அந்த முட்டாள் பெற்றோர், வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மதனபள்ளியில் உள்ள சிவா நகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். இவரது மனைவி பத்மஜா. புருஷோத்தம் நாயுடு, பெண்கள் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். பத்மஜா, தனியார் பள்ளியின் தாளாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு, அலேக்யா, 27, சாய் திவ்யா, 22, என, இரு மகள்கள் இருந்தனர். அலேக்யா, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். சாய் திவ்யா, எம்.பி.ஏ., படித்து முடித்து, ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லுாரியில் இசை பயின்று வந்தார். இவர்கள், சிவா நகரில் கட்டிய புதிய வீட்டில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வசித்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, இவர்கள் எங்கும் செல்லாமல், வீட்டிலேயே இருந்தனர்.

தங்கள் வீட்டில் அற்புதங்கள் நடக்க வேண்டும் என நினைத்து, எப்போதும் சிறப்பு பூஜைகள் செய்வதை, இந்த தம்பதி வழக்கமாக வைத்திருந்தனர்.சமீபத்தில், ஒரு சாமியாரின் யோசனையை கேட்டு, மீண்டும் ஒரு சிறப்பு பூஜை நடத்த திட்டமிட்டனர். நேற்று முன்தினம் காலை, புருஷோத்தமும், பத்மஜாவும், தங்கள் இரு பெண்களையும் அழைத்து, சிறப்பு பூஜைகள் குறித்து விவரித்தனர்.

அன்று காலை, இரு மகள்களையும் வீட்டை சுற்றி, வலம் வரச் செய்துள்ளனர். பின், அவர்களை பூஜை அறையில் வைத்து, பலி பூஜைக்கான உடைகளை அணிவித்து, அங்கு சக்கரங்கள் வரைந்து, பூஜை செய்துள்ளனர்.இதன்பின், தங்கள் இளைய மகளை சூலாயுதத்தால் குத்தி உள்ளனர். மூத்த மகளின் வாயில், சிறிய சொம்பைச் சொருகி, உடற்பயிற்சி செய்யும் கருவியால் அடித்து, சாகடித்துள்ளனர்.இருவரும் உயிருக்கு போராடிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டனர். பூஜைகள் முடிந்ததும், புருஷோத்தம், தன் நண்பருக்கு தகவல் தெரிவித்து வரச் செய்துள்ளார்.அவரது நண்பர், மேலும் மூன்று பேரை உடன் அழைத்து வந்தார். அவர்கள் வந்தபோது, புருஷோத்தம், வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

தன் மனைவி, இரு மகள்களையும் கொன்று விட்டதாக கூறிய அவர், நண்பர்களை உள்ளே விடவும் மறுத்துள்ளார். நண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு வந்தனர்.உடல் முழுதும் காயங்களுடன், இரு இளம் பெண்களின் உடல்கள் கிடந்ததை பார்த்து, கடும் அதிர்ச்சி அடைந்தனர்.புருஷோத்தமையும், அவரது மனைவியையும் கைது செய்தனர்.

ஆனால் அவர்கள், 'திங்கள் கிழமை முதல், சத்யயுகம் பிறக்க போகிறது. எங்கள் மகள்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவர். அதனால், திங்கள் காலை வரை பொறுமையாக இருக்க வேண்டும்' என, மூட நம்பிக்கையின் உச்சத்துக்கே சென்று, போலீசாரிடம் கெஞ்சினர். இதையடுத்து, இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். பத்மஜாவும், புருஷோத்தமும், மகள்களை நிர்வாணமாக்கி, நரபலி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.



போலீசார் கூறியதாவது: கைதான இருவரும் மெத்த படித்த மேதாவிகள். மந்திர தந்திரங்களில் அதி தீவிர நம்பிக்கை உடைய, அவர்களின் மனநிலை சிறிது பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தங்கள் பெண்கள் மீண்டும் உயிருடன் திரும்பி வருவர் என நம்பி, கொலை செய்ததாக திரும்ப திரும்ப கூறுகின்றனர்.தாய் பத்மஜா தான், இந்த கொலைகளை செய்துள்ளார். அப்போது, புருஷோத்தம் அருகில் இருந்தது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணையின் போது முழு தகவலும் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karuppasamy - chennai,இந்தியா
29-ஜன-202111:49:58 IST Report Abuse
karuppasamy முதலில் மதங்களை ஒழிக்கவேண்டும் மக்களை காப்பாற்றவேண்டும்
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இது ஆளேலூயாவின் அற்புத விளையாட்டாக இருக்கும் போலருக்கே முகத்தில் ஆலேலூயா கூட்டம் என்று பளிச்சுனு தெரியுது
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
27-ஜன-202100:10:03 IST Report Abuse
PRAKASH.P பைத்தியக்கார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X